நீங்களா இப்படி பேசியது..மன்மோகன் ஜி உங்களிடம் இருந்து இதனை நான் எதிர்பார்க்கவில்லை-நிர்மலா சீதாராமன்
டெல்லி : பாஜக தலைமையிலான மத்திய அரசையும், மத்திய அரசின் கொள்கைகளையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், மன்மோகன் சிங்கிடம் இருந்து இதனை நான் எதிர்பார்க்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று பேசிய முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், பாஜக பிரிட்டிஷ் கொள்கையின் அடிப்படையில் போலி தேசியவாதியை நம்புகிறது என பேசியிருந்தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
மேலும் இந்தியாவில் பணக்காரர்கள் அடுத்தடுத்து பணக்காரர்கள் ஆகிக் கொண்டே இருக்கிறார்கள் ஏழைகள் மேலும் மேலும் ஏழைகள் ஆகிக் கொண்டே இருக்கிறார்கள் என பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜகவின் பிரித்தாலும் கொள்கையால் அரசியலமைப்பு பலவீனமடைந்துள்ளது எனவும் பாஜக ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் உள்ள நிலையில் இன்னும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவையே குற்றம் சாட்டுவதாக கூறியிருந்தார்.

பாஜக குறித்து விமர்சனம்
பிரதமர் பதவிக்கு என ஒரு குறிப்பிட்ட கௌரவம் உண்டு என பேசிய அவர், நான் பத்து ஆண்டு காலம் பிரதமராக இருந்தபோது எனது பணிகளின் மூலம் பேசியதாகவும், உலகத்தின் முன் தேசத்தின் கவுரவத்தை இழக்க நான் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்றதோடு இந்தியாவின் பெருமையை நான் ஒருபோதும் குறைக்கவில்லை எனவும், அரசியல் லாபத்துக்காக உண்மையை மறைத்து காங்கிரஸ் கட்சி ஒருபோதும் நாட்டைப் பிடிக்கவில்லை என பேசி இருந்தார்.

நிர்மலா சீதாராமன் கருத்து
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மோடி அரசின் பொருளாதாரத்தை கையாளுவது குறித்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது ஆட்சிக்காலத்தில் மன்மோகன் சிங் இந்தியாவை ஐந்தாவது நிலைக்குக் கொண்டு வந்ததாகவும் பணவீக்கத்தை அதிகரித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு இதை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என கூறிய நிர்மலா சீதாராமன் பஞ்சாப் சட்ட மன்ற தேர்தலில் வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க பரிசீலனை செய்து வருவதன் காரணமாக திடீரென்று மன்மோகன் சிங் பொருளாதாரத்தைப் பற்றி பேசுகிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிர்ஸ் குறித்து விமர்சனம்
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ஜிடிபி 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்தது, பணவீக்கம் அதிகரித்தது என குறிப்பிட்டுள்ள நிர்மலா சீதாராமன் தேசிய பங்குச் சந்தையில் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா நாட்டின் மிகப்பெரிய பங்கு சந்தையை நடத்துவதில் சாமியார் ஒருவரின் வழிகாட்டுதல் பெற்று உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது இவ்வளவு காலம் பங்குச் சந்தை எப்படி நடத்தப்பட்டது என்பது கூட அவருக்குத் தெரியாது என கூறியுள்ளார்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications