விரைவில் தேசிய குடிமக்கள் பதிவேடு? மத்திய அரசு சொன்ன பதில்
டெல்லி: ''நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயார் செய்வது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.. இப்போதைக்கு நாடு முழுவதும் என்ஆர்சியை அமல்படுத்தும் எந்த யோசனையும் இல்லை என்றும் அமைச்சர் ராய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அசாம் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2019ல் மக்களவையில் அறிவித்தார்...
அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை கண்டறிய சுப்ரீம்கோர்ட்டின் வழிக்காட்டுதலின்கீழ் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்ட இந்த பதிவேட்டின் இறுதி பட்டியல் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது.
என்ஆர்சி-ஐ ஏற்றுக் கொண்டு... அனைவருக்கும் ஐடி கார்டு தருவோம்... அசாம் பிரசாரத்தில் காங்கிரஸ்

கேள்வி
அசாமில் உள்ள 3.29 கோடி பேரில் 19 லட்சத்திற்கு மேற்பட்டோர் இதில், இடம்பெறவில்லை. இந்த பட்டியலை தொகுக்க 5 ஆண்டுகள் ஆனது.. மேலும் ரூ. 1,220 கோடி செலவானது. ஆனால் 19 லட்சம் பேர் லிஸ்ட்டில் இடம் பெறாததைத் தொடர்ந்து அவர்களின் நிலை குறித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி வருகின்றன.. தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக அசாம் உட்பட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களும் நடந்தன.

முடிவுகள்
இதையடுத்து தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்கும் பணிகள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது... தொடர்ந்து என்ஆர்சி குறித்த முடிவுகளும், தீர்வுகளும் இன்னும் எடுக்கப்படாத நிலையில், அதுகுறித்த தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு முறை மக்களவை கூட்டம் நடக்கும்போதும் இது தொடர்பான விவாதங்கள் எழுப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த மக்களவை கூட்டத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், இதுகுறித்து பதிலளித்திருந்தார்..

தீர்வுகள்
அப்போது அசாமில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் விடுபட்டு போனவர்களுக்கான சட்ட ரீதியான தீர்வுகள் காலாவதியாகவில்லை.. அதனால், அவர்களது குடியுரிமை குறித்து கேள்வி எழாது.. நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயார் செய்வது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

பதிவேடு
அந்த வகையில், இன்றும் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமான மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்துள்ளார்.. அதில், என்ஆர்சி எனப்படும் தேசிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை, என்ஆர்சியை அமல்படுத்தும் எந்த யோசனையும் இப்போதைக்கு இல்லை என்றார்.

விக்கம்
மேலும் குடியுரிமை திருத்தச்சட்டம் (சிஏஏ) பற்றி செர்லும்போது, குடியுரிமை திருத்த சட்டம் டிசம்பர் 12, 2019 அன்று குறிப்பிடப்பட்டு, ஜனவரி 10, 2020 முதல் நடைமுறையில் உள்ளது.. குடியுரிமை திருத்த சட்டத்தின்கீழ் வருபவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என்றார்.