டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மின்வெட்டு பிரச்னை இனி இருக்காது.. நெல்லையில் வருகிறது பிரம்மாண்ட சோலார் மின்நிலையம்! சூப்பர் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: நார்வே அரசுக்குச் சொந்தமான ஸ்டேட்கிராஃப்ட் நிறுவனம், இந்தியாவில் பெரிய அளவில் சோலார் மின் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளது.

இந்தியா உட்பட பெரும்பாலான வளரும் நாடுகளில் மின் தேவை பெரும்பாலும் அனல் மின் நிலையம் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. நிலக்கரியில் இருந்து அனல் மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இருப்பினும், அனல் மின் நிலையங்களால் அதிக காற்று மாசு ஏற்படுவதால், அதைக் குறைத்துவிட்டுப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் அதிகளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஏம்பா.. இது நம்ம கார்தானா? சந்தேகமாக கேட்ட எடப்பாடி.. தலைமை செயலகத்தில் நடந்த பரபர சம்பவம்! ஏம்பா.. இது நம்ம கார்தானா? சந்தேகமாக கேட்ட எடப்பாடி.. தலைமை செயலகத்தில் நடந்த பரபர சம்பவம்!

மின்சாரம்

மின்சாரம்

இருந்த போதிலும், இப்போது வரை நமது நாட்டின் மின் தேவையில் சுமார் 70% வரை நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் இந்தியாவில் மொத்தம் 135 நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நிலக்கரி உற்பத்தி உற்பத்தி பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மின்சார பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டு இருந்தது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

நல்வாய்ப்பாக அப்படி எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும், அப்போதே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட இதர முறைகளில் மின்சார உற்பத்தி செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். இந்தச் சூழலில் நார்வே நாட்டிற்குச் சொந்தமான ஸ்டேட்கிராஃப்ட் என்ற நிறுவனம் இந்தியாவில் தனது முதல் பெரிய அளவிலான சூரிய மின் உற்பத்தி நிலையத்தை இயக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இது நமது நாட்டின் சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை மேம்படுத்தும்.

நெல்லை

நெல்லை

இதில் நமக்கு மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த சோலர் மின்நிலையம் தமிழ்நாட்டில் அமைய உள்ளது என்பது தான். 76 மெகாவாட் (மெகாவாட்) சோலர் மின் நிலையம் நெல்லையில் அமைகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 120 GWh மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இது இந்தியா முழுவதும் இருக்கும் 500,000க்கும் மேற்பட்ட வீடுகளின் வருடாந்திர மின் நுகர்வுக்குச் சமமாகும்.

 முதல் திட்டம்

முதல் திட்டம்

இது குறித்து ஸ்டேட்கிராஃப்ட் நிர்வாக துணைத் தலைவர் ஜூர்கன் ட்ஸ்கோப் கூறுகையில், "நாங்கள் இப்போது இந்தியாவில் கிரீன்ஃபீல்ட் சோலார் திட்டங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். எங்களின் இந்த நோக்கத்தை நனவாக்கும் முதல் திட்டமாக நெல்லை சோலார் திட்டம் உள்ளது. மேலும் சோலார் பிரிவில் இருப்பை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர் சார்ந்த வணிகத்தை வளர்க்கவும் இந்தத் திட்டம் பெரியளவு உதவும்" என்று அவர் தெரிவித்தார்.

ஜெர்மனி நிறுவனம்

ஜெர்மனி நிறுவனம்


நெல்லை சோலார் பார்க், இந்திய குரூப் கேப்டிவ் மாடலின் கீழ் ஏற்படுத்தப்படுகிறது. அதாவது இந்த சோலார் நிலையத்தில் குறைந்தது 26% பங்கை வாடிக்கையாளர்கள் வைத்து இருப்பார்கள். அதேபோல இவர்களிடம் இருந்து மின்சாரமும் நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும். இந்த சோலார் மின் நிலையத்தின் கட்டுமானம் மற்றும் முதல் 3 ஆண்டுகள் இதைப் பராமரிக்கும் பொறுப்பு German Belectric Photovoltaic India Private Ltd என்ற ஜெர்மனி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

குறைந்த விலை

குறைந்த விலை

தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் தங்கள் புதுப்பிக்கத்தக்க மின்சார தேவையைக் குறைந்த விலையில் பூர்த்தி செய்ய இந்த சோலர் திட்டம் உதவும். ஹைட்ரோ, காற்று மற்றும் சூரியசக்தி மூலம் மின்சார உற்பத்தியை வரும் காலத்தில் அதிகப்படுத்த உள்ளதாகவும் ஸ்டேட்கிராஃப்டின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஸ்டேட்கிராஃப்ட் நிறுவனம்

இந்தியாவில் ஸ்டேட்கிராஃப்ட் நிறுவனம்

கடந்த 2004ஆம் ஆண்டு முதலே ஸ்டேட்கிராஃப்ட் நிறுவனம் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இப்போது நிறுவனம் நாட்டில் 215 மெகாவாட் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. இது தவிர இமாச்சலப் பிரதேசத்தில் 150 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் நிலையமும் கட்டுமானத்தில் உள்ளது. அந்தத் திட்டமும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Norway's state-owned Statkraft commissioned its first large-scale solar power plant in Tamilnadu Nellai: (தமிழ்நாட்டில் மிகப் பெரிய சோலார் மின் நிலையம் நெல்லையில் திறப்பு) The 76 Megawatt (MW) Nellai solar power plant will generate 120 GWh of renewable energy per year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X