"400க்கு வாய்ப்பே இல்லை! அதிகபட்சம் 200 தான்!" Ex தலைமை தேர்தல் ஆணையர் பரபர! யாரை சொல்கிறார் தெரியுதா
டெல்லி: லோக்சபா தேர்தல் இன்னும் ஒரு வாரத்தில் நடக்கும் நிலையில், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டாக்டர். எஸ். ஒய். குரைஷி பதிவிட்ட ஒரு போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், ஜூன் 1ஆம் தேதி கடைசிக் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

இதற்கிடையே இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டாக்டர். எஸ். ஒய். குரைஷி இன்று பதிவிட்ட ஒரு ட்வீட் இணையத்தில் உடனடியாக டிரெண்ட் ஆனது.
அதிகபட்சம் 200 தான்: அதாவது டாக்டர் குரைஷி தனது எக்ஸ் பக்கத்தில், "இப்போது 400+ சீட்கள் என்று பேசுகிறார்கள். மே இறுதி வரை காத்திருங்கள், அது 250 ஆகக் குறையும். ஜூன் முதல் வாரத்தில், இது 175-200 என்றே இருக்கும். நான் அரை டஜன் அல்போன்சா மாம்பழங்களின் விலையைப் பற்றிப் பேசுகிறேன்.. ஒவ்வொரு பதிவும் அரசியலைப் பற்றியதாக இருக்க வேண்டியதில்லை" என்று அவர் பதிவிட்டிருந்தார்.
அவர் தனது போஸ்டில் எந்தவொரு இடத்திலும் அரசியல் கட்சியைக் குறிப்பிடவில்லை. இதை அவரே தனது எக்ஸ் பதிவில் கூறினாலும் கூட பலரும் அவர் பாஜக பற்றியே குறிப்பிடுவதாகக் கூறுகிறார்கள். ஏனென்றால் பாஜக தான் இந்தத் தேர்தலில் 400 இடங்களில் வெல்ல வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளது. அதை மறைமுகமாக விமர்சிக்கும் வகையிலேயே குரைஷி இப்படிப் பதிவிட்டுள்ளதாகப் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
இணையத்தில் டிரெண்டிங்: குரைஷியின் இந்த போஸ்ட் கொஞ்ச நேரத்திலேயே இணையத்தில் பேசுபொருள் ஆனது. லோக்சபா தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக பாஜகவின் 'அப் கி பார் 400 பர்' முழக்கத்தைக் குறிவைத்து குரைஷி விமர்சித்துள்ளதாகப் பலரும் கருத்து கூறி வருகிறார்கள். குறிப்பாக வலதுசாரிகள் குரைஷியின் இந்தப் பதிவுக்கு அவரை கடுமையாகச் சாடி வருகிறார்கள்.
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "இதை நீங்கள் மோடியை மனதில் வைத்துச் சொல்கிறீர்கள் என்று தெரியா எங்களுக்கு.. பாஜகவையும் மோடியையும் உங்களுக்குப் பிடிக்காது என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் நேரு குடும்பத்தினர் செய்தி தொடர்பாளர் போலத் தான் பேசி வருகிறீர்கள்" என்று சாடியுள்ளார்.
விமர்சனம்: அதேபோல மற்றொரு நபர், "ஜூன் மாதத்தில் தான் சிறந்த மாம்பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன. மாம்பழ அறுவடை பற்றிய இந்த அடிப்படை கூட தெரியாத 65 வயது நபர், மாம்பழ வகைகள் மற்றும் அதன் விலை பற்றிப் பேசுகிறார். நீங்கள் யாருக்கு விசுவாசமாக இருக்கிறீர்கள் என்பது ஊருக்கே தெரியும். அதைச் சமாளிக்க முயல வேண்டாம்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதேநேரம் குரைஷின் போஸ்ட்டிற்கு சப்போர்ட்டிற்கும் சில கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். உண்மையாகவே இவர் சொன்னது போலத் தான் நடக்கும் எனப் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் மிகச் சரியாகச் சொல்லியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். இப்படி அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் பல வித கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
டாக்டர் குரைஷி: இந்தியக் குடிமைப் பணி அதிகாரியான குரைஷி நமது நாட்டின் 17ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தவர்.. தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நவீன் சாவ்லா ஓய்வு பெற்ற பிறகு கடந்த 2010 ஜூலை 30ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற இவர், சுமார் 2 ஆண்டுகள் இந்த பொறுப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி!












Click it and Unblock the Notifications