டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக அழைத்ததால் டெல்லி சென்ற ஓ பன்னீர் செல்வம்.. விமானத்தில் சென்னை திரும்பினார்.. பேட்டி தர மறுப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனுத்தாக்கல் நிகழ்வில் பங்கேற்ற ஓ பன்னீர்செல்வம் இன்று விமானத்தில் சென்னை திரும்பிய நிலையில் பேட்டி தர மறுத்துவிட்டார்.

Recommended Video

    சிரிப்போடு வந்த OPS! Delhi Hotel-ல் நடந்தது என்ன?

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18 ல் நடைபெற உள்ளது.

    ஜனாதிபதி தேர்தல் முடிவு ஜூலை 21ல் அறிவிக்கப்பட உள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா களமிறக்கப்பட்டுள்ளார்.

    சூது கவ்வி.. தர்மம் வென்றதோ? முகம் முழுக்க சிரிப்போடு வந்த ஓபிஎஸ்! டெல்லி ஹோட்டலில் நடந்தது என்ன? சூது கவ்வி.. தர்மம் வென்றதோ? முகம் முழுக்க சிரிப்போடு வந்த ஓபிஎஸ்! டெல்லி ஹோட்டலில் நடந்தது என்ன?

    வேட்புமனு தாக்கல் நிகழ்வில் ஓபிஎஸ்

    வேட்புமனு தாக்கல் நிகழ்வில் ஓபிஎஸ்

    இந்நிலையில் டெல்லியில் நேற்று திரெளபதி முர்மு வேட்புமனுத்தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா, கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், அவரது மகனும் எம்பியுமான ரவீந்திரநாத் பங்கேற்றனர்.

    முழு ஆதரவு உண்டு

    முழு ஆதரவு உண்டு

    முன்னதாக இந்த நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் பொதுக்குழு முடிந்த நிலையில் அன்று இரவு ஓ பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்றைய வேட்புமனுத்தாக்கலுக்கு பிறகு திரொளபதி முர்மு ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு கோரினார். இதுபற்றி பன்னீ்ர்செல்வம் கூறுகையில், ‛‛ஜனாதிபதி தேர்தலில் அதிமுக சார்பில் திரௌபதி முர்முவுக்கு மனப்பூர்வமாக ஆதரவு உண்டு'' என்றார்.

    சென்னை திரும்பிய ஓ பன்னீர்செல்வம்

    சென்னை திரும்பிய ஓ பன்னீர்செல்வம்

    இந்நிலையில் தான் ஓ பன்னீர்செல்வம் பாஜகவின் சில தலைவர்களை சந்தித்து கட்சியின் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து பேசி தனக்கான செல்வாக்கை நிலைநிறுத்த உதவி கோரியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லி சென்ற ஓ பன்னீர் செல்வம் இன்று மாலை விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு பேட்டி காண முயன்றனர். ஆனால் அவர் காரில் ஏரி பேட்டி கொடுக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    பொதுக்குழு பிரச்சனையை ஆலோசனை

    பொதுக்குழு பிரச்சனையை ஆலோசனை

    மேலும் அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் தலைத்தூக்கி உள்ளது. இந்த பிரச்சனை நேற்று முன்தினம் நடந்த அதிமுக பொதுக்குழுவிலும் எதிரொலித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் ஓ பன்னீர்செல்வத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு அவர் அவமானப்படுத்தப்பட்டார். இந்நிலையில் தான் அவர் டெல்லி சென்றார். இந்நிலையில் ஓ பன்னீர் செல்வம் டெல்லியில் பாஜகவின் சில முக்கிய தலைவர்களை சந்தித்து கட்சி விவகாரம் குறித்து பேசியுள்ளார். மேலும் கட்சியில் தான் ஓரங்கட்டப்படும் விஷயத்தில் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    O Panneerselvam returned to Chennai on a flight today to attend the nomination function of BJP presidential candidate Thirapathy Murmu in Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X