ஓலா, ஊபர் பயணிகளுக்கு நிம்மதி.. இனி 'டிப்ஸ்' கேட்டு வற்புறுத்த தடை.. மத்திய அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஓலா, ஊபர் உள்ளிட்ட ஆன்லைன் வாடகை கார் செயலிகள் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளிடம், பயணம் தொடங்குவதற்கு முன்பே டிப்ஸ் கேட்கும் நடைமுறைக்கு மத்திய அரசு உடனடியாக தடை விதித்துள்ளது.

அதேபோல் விரைவாக கார் கிடைக்க வேண்டும் என்பதற்காக பயணிகளை கூடுதல் தொகை செலுத்துமாறு தூண்டக் கூடாது என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

cap Ola taxi Uber

பயணிகளின் அதிருப்தி

சமீபகாலமாக முன்னணி கேப் செயலிகளில் கார் புக் செய்யும்போது, அட்வான்ஸ் டிப்ஸ், ஆட்-ஆன் தேர்வு செய்யுங்கள் மற்றும் விரைவான ரைடு உறுதிப்படுத்தலுக்கு டிப்ஸ் அளியுங்கள் போன்ற வாசகங்கள் திரையில் தோன்றி வந்தன. இதனால், கூடுதல் பணம் கொடுத்தால் மட்டுமே ஓட்டுநர்கள் முன்பதிவை ஏற்றுக்கொள்வார்கள் என்ற மறைமுக அழுத்தம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டது.

கூடுதல் கட்டணம் செலுத்தாத பயணிகளுக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரத்தை தீவிரமாக பரிசீலித்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம், இந்த முறைகேடான வர்த்தக நடைமுறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டுள்ளன.

புதிய விதிமுறைகள் சொல்வது என்ன?

மோட்டார் வாகன திரட்டுனர் வழிகாட்டுதல்கள் 2025-ன் (Motor Vehicle Aggregator Guidelines, 2025) கீழ், அனைத்து கேப் நிறுவனங்களும் தங்களது மொபைல் செயலிகள் மற்றும் டிஜிட்டல் தளங்களை உடனடியாக மறுஆய்வு செய்து மாற்றங்களைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணம் முடிவதற்கு முன்பாக எந்தவொரு வகையிலும் 'டிப்ஸ்' அல்லது கூடுதல் கட்டண ஆப்ஷன்களை திரையில் காட்டக் கூடாது.கூடுதல் கட்டணம் செலுத்தினால் மட்டுமே விரைவாக கார் கிடைக்கும், ஓட்டுநர் உடனடியாக ஏற்றுக்கொள்வார் அல்லது காத்திருப்பு நேரம் குறையும் என்ற தோற்றத்தை உருவாக்கக் கூடாது.

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சமமான மற்றும் வெளிப்படையான சேவை வழங்கப்படுவதை செயலிகள் உறுதி செய்ய வேண்டும்.

இனி ஓட்டுநர்களுக்கு டிப்ஸ் கொடுக்க முடியாதா?

இந்த உத்தரவு ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் Tips தொகையை முழுமையாகத் தடை செய்யவில்லை. பயணிகள் தங்களுக்கு விருப்பமான ஓட்டுநர்களுக்கு வழக்கம் போல் டிப்ஸ் வழங்க முடியும்.

வழிகாட்டுதல் விதி எண் 14.15-ன் படி, பயணம் முழுமையாக நிறைவடைந்த பிறகு மட்டுமே செயலிகள் டிப்ஸ் வழங்கும் விருப்பத்தை வாடிக்கையாளர்களுக்குக் காட்ட வேண்டும். அதேபோல், வாடிக்கையாளர் வழங்கும் முழு டிப்ஸ் தொகையையும் ஓட்டுநருக்கே வழங்க வேண்டும்; அதில் எந்தவொரு பிடித்தத்தையும் நிறுவனங்கள் செய்யக் கூடாது என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்குக் கிடைக்கும் பலன்கள்

பயணம் முடிந்த பிறகு ஒரு ஓட்டுநரின் சிறந்த சேவையைப் பாராட்டி டிப்ஸ் வழங்குவது பயணிகளின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், காரைப் பெறுவதற்காகவே கட்டாயத்தின் பேரில் முன்கூட்டியே கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் இனி இருக்காது.

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம், ஆன்லைன் கேப் முன்பதிவில் நிலவி வந்த தேவையற்ற மறைமுகக் கட்டணங்கள் மற்றும் மன உளைச்சலில் இருந்து பயணிகளுக்கு முழுமையான நிவாரணம் கிடைத்துள்ளது. நிறுவனங்கள் இந்த மாற்றங்களை காலதாமதமின்றி உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+