டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீண்டும் கையிலெடுத்த "ஒரே நாடு, ஒரே தேர்தல்" கோஷம்.. வாக்காளர் தின உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

By
Google Oneindia Tamil News

டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வாக்காளர் பட்டியல் என்பதை மீண்டும் வலியுறுத்தி தேசிய வாக்காளர் தினத்தில் பிரதமர் மோடி உரையாற்றியிருக்கிறார்.

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி 12வது தேசிய வாக்காளர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. வாக்காளர் தினத்தில் 'நமோ ஆப்' மூலமாக குஜராத் பிரதமர் மோடி உரையாற்றினார்.

உத்தரகாண்ட் தேர்தல்: 4 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ500க்கு கீழ் சிலிண்டர் விலை- காங். வாக்குறுதி உத்தரகாண்ட் தேர்தல்: 4 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ500க்கு கீழ் சிலிண்டர் விலை- காங். வாக்குறுதி

அப்போது அவர், இந்தியாவில் நடக்கும் தேர்தல்கலில் வாக்களிப்பது தொடர்ந்து குறைந்துவருவது கவலையளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நகரங்களில் இருப்பவர்கள், ப‌டித்தவர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் இருக்கும் பகுதிகளில் குறைந்த அளவே வாக்குப்பதிவாகிறது. இந்த‌ நிலை இந்தியா போன்ற துடிப்பான ஜனநாயகத்தில் மாற வேண்டும் என்று கூறினார்.

 வாக்காளர் தினம்

வாக்காளர் தினம்

மேலும் அவர் பேசுகையில்,தொடர்ச்சியான தேர்தல் நடப்பதால், எல்லாவற்றிலும் அரசியல் காணப்படுகிறது. இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படும். 1951-52-ல் நடந்த முதல் லோக்சபா தேர்தலில் 45% ஆக இருந்த வாக்கு சதவீதம் 2019 இல் 67% ஆக உயர்ந்திருக்கிறது.

 வாக்களிப்பு

வாக்களிப்பு

இந்தியா முழுவதும் பெண் வாக்காளர்கள் தொடர்ந்து வாக்களித்து வருவது அதிகரித்துள்ளது. இது நல்ல விஷயம். பெண்கள் தொடர்ந்து வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும். குடிமக்கள் முதல் அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் வரை அனைவரும் வாக்குப்பதிவு குறைந்துவருவது குறித்து யோசிக்க வேண்டும்.

 படித்தவர்கள் வாக்களிப்பதில்லை

படித்தவர்கள் வாக்களிப்பதில்லை

படித்த மற்றும் வளமான பகுதிகளாகக் கருதப்படும் நகர்ப்புறங்களில் குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகிறது. படித்தவர்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் தேர்தல் பற்றி விவாதிக்கிறார்கள். ஆனால் வாக்களிக்க செல்வதில்லை. ஆகவே எந்தத் தேர்தலாக இருந்தாலும் 75% மக்கள் வாக்களிப்பதை உறுதி செய்யுமாறு தொண்டர்களை வலியுறுத்தினார்.

தேர்தல்

தேர்தல்

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் வாக்குப்பதிவு மிக முக்கிய பங்காற்றி வருகிறது. வாக்குப்பதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வாக்காளர்கள் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்தால் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். "ஒரு தேசம், ஒரே தேர்தல்" மற்றும் "ஒரு நாடு, ஒரே வாக்காளர் பட்டியல்" குறித்து விவாதங்கள் நடக்கட்டும். ஆரோக்கியமான கருத்துக்கள் வெளிவரட்டும். சுதந்திரத்தின் நூற்றாண்டான 2047-க்குள் ஆரோக்கியமான இந்தியா உருவாகும்'' என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

English summary
Prime Minister Modi has addressed on the National Voters' Day as one country, one election, one voter list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X