டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தோல்வியில் திணறும்...ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு...நினைத்தது நடக்கவில்லை!!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் கொரோனா தொற்றுக்குப் பின்னர் நாடு முழுவதிலும் இருந்து இடம் பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். இவர்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும், வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் கொரோனா பொது முடக்கத்தில் உனடடியாக அமலுக்கு வந்தது.

இதனால் மக்கள் பயனடைந்தார்களா என்றால் இல்லை என்றுதான் ஆய்வு முடிவு கூறுகிறது. பெரிய அளவில் பயனாளிகள் பயன் பெற வேண்டும் என்று இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், யாருக்கு கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கு இந்த திட்டத்தினால் பயன் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

எஸ்ஐ அடிச்சுட்டாரு.. சாகப்போறேன். என் ஆன்மா சும்மா விடாது.. மந்திரவாதி மரண வாக்குமூலம்எஸ்ஐ அடிச்சுட்டாரு.. சாகப்போறேன். என் ஆன்மா சும்மா விடாது.. மந்திரவாதி மரண வாக்குமூலம்

2000 பேருக்கு மட்டுமே

2000 பேருக்கு மட்டுமே

இந்த திட்டத்தின் கீழ் 2020, ஜூலை வரை மின்விநியோகத்தின் மூலம் 2000 பேருக்குத்தான் மாநிலங்களுக்கு இடையில் ரேஷன் பொருள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது வெறும் 13,000 பேருக்கு மட்டுமே இந்தத் திட்டத்தால் பயன் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் வெறும் 31,500 கிலோ உணவுப் பொருட்கள்தான் வழங்கப்பட்டுள்ளது.

90 சதவீதம் இணைப்பு

90 சதவீதம் இணைப்பு

இந்த தகவல்களை உணவுத்துறையில் இருக்கும் அதிகாரிகள் நாடாளுமன்ற நிலைக்குழு கமிட்டி முன்பு நடப்பு வாரத்தின் துவக்கத்தில் சமர்ப்பித்துள்ளனர். மத்திய அரசின் கூற்றுப்படி, 24 மாநிலங்களில் 90 சதவீத ரேஷன் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், வெறும் 31,500 கிலோ உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு இருப்பது மிகவும் மோசமான உதாரணமாக இருக்கிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

23 கோடி ரேஷன்தாரர்கள்

23 கோடி ரேஷன்தாரர்கள்

இந்தியாவில் மொத்தம் 5.35 லட்சம் ரேஷன் கடைகள் உள்ளன. இதன் மூலம் 23 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் பயன் அடைகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக இடம் பெயர் தொழிலாளர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறி வருகின்றனர். முன்பு தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் தற்போது மீண்டும் பணிக்கு திரும்பி வருகின்றனர். ஆனால், இந்தக் கால கட்டத்தில் தான் குறைவான ரேஷன் பொருட்கள் விநியோகமும் நடந்துள்ளது.

தானியங்கி

தானியங்கி

நாடாளுமன்ற நிலைக்குழு கமிட்டி சமர்ப்பித்து இருக்கும் தகவலில், ''நாடு முழுவதும் 4.88 ரேஷன் கடைகளில் ePoS devices கருவி பொருத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளாது. தானியங்கி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எங்கு சென்றாலும் ரேஷன் அட்டைகளை காண்பித்து இதன் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

புதிய மாநிலங்கள் இணைப்பு

புதிய மாநிலங்கள் இணைப்பு

தற்போது அனுமதிக்கப்பட்ட மாநிலங்களுடன் சேர்த்து ஆகஸ்ட் மாதம் முதல் ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், நாகலாந்து, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களிலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் உணவுப் பொருள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தானியங்கி முறையில் இயங்க பொருத்தப்பட்டு இருக்கும் கருவி சில கிராமங்களில் இயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இடம் பெயர் தொழிலாளர்கள்

இடம் பெயர் தொழிலாளர்கள்

நாட்டில் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் கொரோனா கால கட்டத்தில் 8 கோடி இடம் பெயர் தொழிலாளர்களுக்கு 8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. ஆனால், இதில் 6.39 டன் மட்டும் மாநிலங்களை சென்றடைந்துள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி 2.46 இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, அதாவது பட்டினியில் இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 8 கோடி பேரில் வெறும் 2.5 பேருக்கு இதன் பலன் எட்டியுள்ளது. இடம் பெயர் தொழிலாளர்கள் எந்தெந்தத மாநிலங்களில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை கணக்கிட மாநிலங்கள் தவறிய காரணத்தினால் இந்த தவறும் ஏற்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு எதிர்ப்பு

தமிழ்நாடு எதிர்ப்பு

இந்த திட்டத்தை நடப்பு பாஜக அரசு அறிமுகம் செய்து இருக்கிறது. ஆனாலும், நடைமுறைபடுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய தானியங்கி கருவி வேலை வெய்வதில்லை. கையில் குறிப்புகளை எழுத வேண்டும். இணையதளம் இல்லாமல் பயோமெட்ரிக் வேலை செய்யாது. மேலும், மேற்குவங்கம், தமிழ்நாடு, அசாம், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் திணறி வருகிறது.

English summary
One Nation One ration Card: Failure to meet the demands during corona pandemic says survey
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X