டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2020 ஆம் ஆண்டுக்கான இந்தி வார்த்தையை தேர்வு செய்த ஆக்ஸ்போர்டு.. மோடி அதிகம் பயன்படுத்திய வார்த்தை

Google Oneindia Tamil News

டெல்லி: 2020ஆம் ஆண்டுக்கான இந்தி வார்த்தையாக பிரதமர் மோடி பயன்படுத்திய ஆத்ம நிர்பார் பாரத் என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு நிறுவனம் தேர்வு செய்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உலகப் பொருளாதாரமே முடங்கும் நிலை ஏற்பட்டது.

20 லட்சம் கோடி ரூபாய்

20 லட்சம் கோடி ரூபாய்

பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அந்த திட்டத்திற்கு ஆத்மநிர்பார் பாரத் என பெயரிடப்பட்டது. இதற்கு பிரதமர் மோடி பெயர் வைத்தார்.

இந்தி

இந்தி

அதாவது தற்சார்பு இந்தியா என்பதுதான் இந்தியில் ஆத்மநிர்பார் பாரத் ஆகும். இந்த நிலையில் 2020ஆம் ஆண்டுக்கான இந்தி வார்த்தையாக ஆத்மநிர்பார் பாரத்தை ஆக்ஸ்போர்டு நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. மொழி வல்லுநர்களின் ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த கிரித்திகா அகர்வால், பூனம் நிகம் சாஹே இமோகென் ஃபோக்ஸெல் தேர்வு செய்துள்ளனர்.

அவசியம்

அவசியம்

இது தொடர்பாக ஆக்ஸ்போர்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா பாதிப்பு தொடங்கிய நேரத்தில் கொரோனா பாதிப்பு நிதி திட்டத்தை அறிவிக்கும் போது பிரதமர் மோடி ஒரு நாடு பொருளாதார ரீதியாக சமூக ரீதியாக தனிநபராக தற்சார்பு நிலையை அடைய வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

பிரதமர் மோடியின் உரையில் ஆத்மநிர்பார் பாரத் என்ற வார்த்தையின் பயன்பாடு அதிகமாகவே இருந்தது. ஆத்மநிர்பார் பாரத் பிரச்சாரத்தின் வெற்றியின் அடையாளமாக இந்தியாவின் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து அதிக அளவில் தயாரிக்கப்படுவது முன்னுதாரணமாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Aatmanirbhar bharat the word used by PM Modi is selected as the hindi word used more in 2020 by Oxford.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X