டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவிரவாத தடுப்பு நடவடிக்கை.. பாகிஸ்தானோடு "கிரே லிஸ்டில்" சேர்ந்த துருக்கி.. எஃப்ஏடிஎஃப் அறிவிப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பான எஃப்ஏடிஎஃப் (FATF) வெளியிட்ட பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து கிரே லிஸ்டில் நீடிக்கும் என்று எஃப்ஏடிஎஃப் அறிவித்துள்ளது. எஃப்ஏடிஎஃப் வெளியிட்டுள்ள பட்டியலில் புதிதாக துருக்கியும் கிரே லிஸ்டில் இணைந்துள்ளது.

Recommended Video

    Pakistan உடன் Grey list-ல் சேர்ந்த Turkey | FATF | Oneindia Tamil

    பொதுவாக உலக நாடுகளின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை எஃப்ஏடிஎஃப் அமைப்புதான் கவனிக்கும். தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பான எஃப்ஏடிஎஃப் ஒவ்வொரு நாட்டிலும் தீவிரவாதம் எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது.

    8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது! 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!

    அண்டை நாடுகளுக்கு எதிராக தீவிரவாதிகள் வளர்த்துவிடப்படுகிறார்களா, தீவிரவாதிகளுக்கு ஒரு நாட்டின் அரசு தரப்பில் இருந்து நிதி, ஆதரவு வழங்கப்படுகிறதா என்பதை தீவிரவாதத்திற்கு எதிரான இந்த அமைப்புதான் கவனிக்கும்.

    எஃப்ஏடிஎஃப்

    எஃப்ஏடிஎஃப்

    சர்வதேச அமைப்பான எஃப்ஏடிஎஃப் (பினான்சியல் ஆக்சன் டாஸ்க் போர்ஸ் - Financial Action Task Force - FATF) தீவிரவாத குற்றங்கள், அது தொடர்பான பொருளாதார குற்றங்கள், பண மோசடிகள் குறித்து விசாரிக்கும் அமைப்பாகும். பெரும்பாலும் தீவிரவாதிகளுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என்பதை இந்த அமைப்பு தீவிரமாக கண்காணிக்கும்.

    தரம் பிரிக்கும்

    தரம் பிரிக்கும்

    இதன் அடிப்படையில் உலகில் உள்ள நாடுகளை இது தரம் பிரிக்கும். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளை எஃப்ஏடிஎஃப் பிளாக் லிஸ்ட் செய்வது வழக்கம். தீவிரவாதிகளுக்கு ஒரு நாடு கொடுக்கும் ஆதரவை வைத்து கிரே லிஸ்ட், பிளாக் லிஸ்ட் என்று இது வகைப்படுத்தும். பொதுவாக இதன் கூட்டம் பாரிசில் நடக்கும்.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    இந்த நிலையில்தான் எஃப்ஏடிஎஃப் (FATF) வெளியிட்ட பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து கிரே லிஸ்ட் பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து கிரே லிஸ்டில் நீடிக்கும் என்று எஃப்ஏடிஎஃப் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாடு இதில் கிரே லிஸ்டில் கடந்த 2018 ஜூனில் இருந்தே இருந்து வருகிறது. இடையில் பாகிஸ்தான் இதில் கருப்பு லிஸ்டிற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    லிஸ்ட்

    லிஸ்ட்

    ஆனால் பாகிஸ்தான் எஃப்ஏடிஎஃப் அறிவுரைகளை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது. கடந்த முறை தீவிரவாத அமைப்புகளுக்கு செல்லும் பணத்தை பாகிஸ்தான் அரசு கட்டுப்படுத்தவில்லை. மும்பை தாக்குதல், இரட்டை கோபுர தாக்குதல்களை செய்த அமைப்புகளை பாகிஸ்தான் ஒடுக்கவில்லை என்று கூறி பாகிஸ்தானை கிரே லிஸ்டில் தொடரும்படி எஃப்ஏடிஎஃப் அறிவித்தது.

    கிரே லோச்ட்

    கிரே லோச்ட்

    இந்த நிலையில்தான் 4 முறையாக நடந்த விசாரணையிலும் பாகிஸ்தான் கிரே லிஸ்டில் நீடிக்கும் என்று எஃப்ஏடிஎஃப் அறிவித்துள்ளது. 34 தீவிரவாத கட்டுப்பாட்டு விதிகளில் 4 விதிகளை பாகிஸ்தான் மதிக்கவில்லை. தீவிரவாத முகாம்கள் மீது நடவடிக்கை எடுக்காதது, ஐநாவால் தடை செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தான் கிரே லிஸ்டில் நீடிக்கிறது.

    துருக்கி

    துருக்கி

    4 விதிகளை பின்பற்றியது பாகிஸ்தான் கிரே லிஸ்டில் இருந்து நீக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இன்னொரு பக்கம் துருக்கி, ஜோர்டன், மாலி ஆகிய நாடுகள் கிரே லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளது. அல் கொய்தா அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தாலும், ஆப்கானிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாலும் துருக்கி கிரே லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

    English summary
    Pakistan will remain on Greylist, Turkey joins too says Terror Watchdog FATF after the review meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X