திமுகவிடம் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசு? விரைவில் கூடும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை செய்ய இந்த கூட்டம் கூட்டப்படுகிறது.

வழக்கமாக மழைக்கால கூட்ட தொடருக்கு பிறகு நாடாளுமன்றம் டிசம்பர் மாதம் தான் குளிர்கால கூட்ட தொடருக்காக கூட்டப்படும். இதற்கிடையே அதற்கு முன்னதாகவே ஒரு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Parliament central govt

நாடாளுமன்ற கூட்டத்தொடர்

மத்திய அரசு இம்மாத இறுதியில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் இரு முக்கிய மசோதாக்களை கொண்டுவர அரசு தயாராகி வருவதாகவும், அவற்றை நிறைவேற்றுவதற்கு தேவையான ஆதரவு இருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மக்களவையில் தேவையான 3ல் இரு பங்கு ஆதரவு இருப்பதாக மத்திய அரசு நம்புகிறது. மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய சூழலைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சிகளிடமும் ஆதரவு திரட்டும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிறப்பு பெரும்பான்மை

கடந்த ஏப்ரல் 17ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா மக்களவையில் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், 3ல் இரு பங்கு ஆதரவு கிடைக்காததால் மசோதா தோல்வியடைந்தது. இது மத்திய அரசுக்கு பின்னடைவாக அமைந்தது.

அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை தேவை. . அதாவது சுமார் 360 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். தற்போதைய மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தாலும், மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லை. தற்போது மக்களவையில் 540 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த கூட்டத்தொடருக்கு பிறகு ஆளும் தரப்பின் பலம் அதிகரித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த 20 எம்பிக்களும், சிவசேனா (உத்தவ் தாக்கரே) பிரிவை சேர்ந்த 6 எம்பிக்களும் ஆளும் தரப்புக்கு மாறியுள்ளன.

திமுகவுடன் பேச்சுவார்த்தை

இது மட்டுமின்றி மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவிக்க திமுகவுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக தேர்தலுக்கு பிறகு காங்கிரஸுடன் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, திமுக இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், இந்த மசோதாக்களுக்கு ஆதரவு தர திமுகவுடன் மத்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது தவிர சில சிறிய எதிர்க்கட்சிகளுடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளியான தகவல்

கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி முடிவடைந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்ததாக அறிவிப்பு வெளியாகவில்லை.. இதனால் அதே கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. சிறப்புக் கூட்டம் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+