அடுத்தடுத்து கசியும் “அசிங்கங்கள்”.. மறைத்ததா ஏர் இந்தியா? லண்டன் விமானத்தில் சிறுமியிடம் சில்மிஷம்
டெல்லி: அமெரிக்க ஏர் இந்தியா விமானத்தில் இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் வயதான மூதாட்டியின் மீது சிறுநீர் கழித்து ரகளையில் ஈடுபட்டது பல மாதங்களுக்கு பின் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதே ஏர் இந்தியா விமானத்தில் கடந்த 4 மாதங்கள் முன்பாக நடந்த மேலும் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி மும்பையில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தனது தாய் மற்றும் சகோதரருடன் சென்ற 8 வயது சிறுமியிடம் ஒரு பயணி தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது.
மும்பையில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் AI 131 என்ற விமானத்தில் 8 வயது சிறுமி தன்னுடைய தாய் மற்றும் 20 வயது சகோதரருடன் பயணித்து இருக்கிறார்.

தாய் குற்றச்சாட்டு
அதே விமானத்தில் குடிபோதையில் பயணம் செய்த ஒரு ஆண் அந்த 8 வயது சிறுமியை தகாத முறையில் தொட்டத்தாக அவரது தாய் மற்றும் சகோதரர் குற்றம்சாட்டி இருக்கின்றனர். இது குறித்து அந்த தாய் எழுதிய புகார் கடிதத்தில், "டாடா ஏர் இந்தியா ஊழியர் அதிகளவில் மது வழங்கியதால் அந்த பயணி போதையின் உச்சத்துக்கு சென்றார்.

அதிக மது கொடுத்த ஏர் இந்தியா
அதன் பின்னர் என்னுடைய மகன் மற்றும் மகளை அவர் துன்புறுத்தினார். விஸ்கி மற்றும் சோடாவை அதிக அளவில் விமான பணியாளர் வழங்கிய பிறகே அந்த நபர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டார். விமான பணியாளர்கள் பயனிகளுக்கு அளவான மதுவை வழங்க உத்தரவிட வேண்டும். விமான பணியாளர்கள் உடனடியாக அவரை தடுக்க முயன்றனர்.

தவறாக தொட முயற்சி
ஆனால், அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்த அவர்கள் முயற்சி செய்யவே இல்லை. என் மகள் அருகே அமர்ந்திருந்த அந்த நபர் தகாத முறையில் அவரை தொட முயற்சித்தபோது என் மகன் அதை பார்த்துவிட்டான். அதை விமான பணியாளர்களிடம் சொல்ல முயன்றபோது ஆங்கிலத்தில் அசிங்கமான வார்த்தைகளால் எங்களை திட்டினார்." என்றார்.

ஏர் இந்தியா விளக்கம்
விமானத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் இதனை உறுதிபடுத்தி இருப்பதாக ஏர் இந்தியா தற்போது விரிவான விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறது. இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், "கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி மும்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் சிறுமியிடம் பயணி ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் நடந்தது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.

மாற்று இருக்கை
இதனை அறிந்தவுடன் விமான ஊழியர்கள் அந்த நபரை தனிமைப்படுத்தினார்கள். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகளை செய்ததுடன், அவருக்கும், அவரது தாய் மற்றும் சகோதரருக்கு மாற்று இருக்கைகளை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட அந்த பயணி தொடர்ந்து தகாத முறையில் நடந்துகொண்டதால் விமானி அவருக்கு எச்சரிக்கை கடிதத்தை வழங்கினார்.

விசாரணை கமிட்டி
இருந்து அந்த நபர் தன்னுடைய மோசமான நடத்தைகளை நிறுத்ததால் கட்டுப்படுத்தும் சாதனை பயன்படுத்தப்பட்டது. அத்துடன் ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா அதிகாரிகளிடம் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது." என்றார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அடுத்த விசாரணை ஜனவரி 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications