வந்தே மாதரம் மசோதா.. நாட்டை பிளவுபடுத்துறீங்க.. நீங்கதான் தேச விரோதி.. கொந்தளித்த கனிமொழி!
டெல்லி: வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்று சட்டத்தை கொண்டு வருவதன் மூலமாக தேச உணர்வை மக்களிடம் திணிக்க முடியாது என்று திமுக எம்பி கனிமொழி லோக்சபாவில் பேசியுள்ளார். வந்தே மாதரம் கட்டாயம் என்ற மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கூறியுள்ள கனிமொழி, இந்துத்துவாவின் செயல் திட்டமே வந்தே மாதரம் மசோதா என்றும் சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் வந்தே மாதரம் கட்டாயம் என்ற மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது லோக்சபாவில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவிற்கு திமுக எம்பிக்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். குறிப்பாக கனிமொழி நாடாளுமன்றத்தில் கொந்தளித்தார்.

இந்த மசோதா குறித்து திமுக எம்பி கனிமொழி பேசுகையில், தேச பக்தியை ஒரு சட்டத்தின் மூலமாகவோ, வந்தே மாதரம் பாடலை பாட வைப்பதன் மூலமாகவோ தேச உணர்வை மக்களிடம் திணிக்க முடியாது. வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்குவது இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானது. வந்தே மாதரம் பாடலை பாடவில்லை என்றால் எங்களை பாஜக தேசத் துரோகிகள் என்கிறது.
ஆனால் உண்மையான தேசத் துரோகி பாஜக தான். வந்தே மாதரம் பாடல் மசோதாவை திமுக எதிர்க்கிறது. நாட்டை ஏன் பிளவுப்படுத்துகிறீர்கள்?அரசை எதிர்த்தால் நாட்டுக்கு எதிரானவர்கள் என்கிறீர்கள்.. இந்துத்துவ முகமூடி போட்டு கொண்டு மசோதாவை கொண்டு வந்துள்ளது பாஜக.. 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இதன்பின் திமுக எம்பி ஆ.ராசா பேசுகையில், இந்தியாவின் பிரிவினைக்கு காரணமே சாவர்க்கர் மற்றும் வந்தே மாதரம் பாடல் தான். வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்கும் மசோதா சட்டப்பூர்வமான மோசடி என்றும், அது தேசத்தை பிளவுபடுத்தும் என்று ஆவேசமாக கூறினார். இதன்பின் வந்தே மாதரம் பாடல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இதன்பின் ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்த பின், சட்டமாக மாறும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications
