டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடேங்கப்பா! இனி 10இல் ஒரு பங்கு தான் டோல் கட்டணம்.. மத்திய அரசு கொண்டு வரும் சூப்பர் திட்டம்!

Google Oneindia Tamil News

டெல்லி: டோல்கேட் தொடர்பாக மத்திய அரசு விரைவில் புதியதொரு திட்டத்தைக் கொண்டு வர உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் டோல்கேட் என்றாலே அலர்ஜி தான்! அதிகப்படியாகக் கட்டணம் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளிட்டவை வாகன ஓட்டிகளுக்கு இடையே கடுமையான சோர்வை ஏற்படுத்திவிடும்.

அதிலும் வாகன நெரிசல் அதிகம் உள்ள சுங்கச் சாலைகளுக்கான சில சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரம் மிக அதிகமாகவே இருக்கும். சாலைகளின் தரமும் கூட அவ்வளவு ஒன்றும் சிறப்பாக இருக்காது.

இடி, மின்னலுடன் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்! இடி, மின்னலுடன் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

 பாஸ்ட்டேக்

பாஸ்ட்டேக்

இப்படிப் பல மணி நேரங்கள் டோல்கேட்களில் காத்திருப்புகளுக்கு முடிவு கட்டும் வகையில் மத்திய அரசு ஃபாஸ்ட்டேக் என்ற புதிய ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து இருந்தது. இது மெல்ல அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டன. வாகனத்தின் முகப்பில் இந்த ஃபாஸ்ட் டேக் ஒட்டப்பட்டு இருக்கும், டோல்கேட்களை தாண்டும் போது, தானியங்கி முறையில் நமது கணக்கில் இருந்து பணம் பிடித்துக் கொள்ளப்படும்.

 புதிய திட்டம்

புதிய திட்டம்

இருப்பினும், டோல்சாலைகளில் வெறும் சில கிலோமீட்டர் செல்ல வேண்டியவர்கள் கூட முழு சாலையைப் பயன்படுத்தச் செலுத்தும் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய சூழல் இருந்தது. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு இப்போது புதிய திட்டத்தைக் கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்து வருகிறது. ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் உதவி உடன் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

 சோதனை தொடக்கம்

சோதனை தொடக்கம்

இதற்கான சோதனையையும் மத்திய அரசு சத்தமில்லாமல் ஆங்காங்கே தொடங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி, ஒட்டுமொத்த சாலைக்கும் நாம் டோல் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை. நெடுஞ்சாலையில் எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறோமோ அதற்கான சுங்க கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.

 10இல் ஒரு பங்கு

10இல் ஒரு பங்கு

ஜிபிஎஸ் அடிப்படையில் எவ்வளவு கிலோமீட்டர் பயணித்துள்ளனர் என்பது கணக்கிடப்படும். அதாவது சுங்க சாலையில் சில கிலோமீட்டர்களை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள் என்றால், அந்த குறிப்பிட்ட கிமீ-க்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.! ஒட்டுமொத்த சாலைக்கான கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை. இதன் மூலம் இப்போது நாம் செலுத்தும் கட்டணத்தின் ஒரு பகுதியை மட்டும் செலுத்தினால் போதும் என்ற சூழல் உருவாகும்.

 நிதின் கட்கரி

நிதின் கட்கரி

முன்னதாக கடந்த மார்ச் மாதம் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை மத்திய அரசு ஓராண்டுக்குள் அகற்றும் என்று கூறி இருந்தார். மேலும், சுங்கச்சாவடிகளுக்குப் பதிலாக ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறை கொண்டு வரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய நாடுகள்

இப்போது முழு சாலையைப் பயன்படுத்த வேண்டிய கட்டணத்தை வாகன ஓட்டிகள் செலுத்துகின்றனர். ஆனால், ஜிபிஎஸ் முறை வந்த உடன் எவ்வளவு தூரம் பயணிக்கிறோமா அவ்வளவு தூரம் செலுத்தினால் போதும். ஐரோப்பிய நாடுகளில் இப்படி ஜிபிஎஸ் முறையில் டோல் கட்டணம் வசூலிக்கும் முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதை அடிப்படையாக வைத்தே இந்தியாவும் இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

 நேரடியாக கழிக்கப்படும்

நேரடியாக கழிக்கப்படும்

ஜெர்மனியில் பெரும்பாலான வாகனங்களில் ஜிபிஎஸ் சாதனங்கள் நிறுவப்பட்டு உள்ளன. இதன் மூலம் வாகனங்கள் சுங்க கட்டத்திற்கான பகுதிக்குள் நுழையும் போதில் இருந்து, ​​வரி கணக்கீடு தொடங்குகிறது. நெடுஞ்சாலைகளை விட்டுவிட்டு சாதாரண சாலைக்குத் திரும்பும்போது, பயணித்த கிலோமீட்டர்கள் கணக்கிடப்பட்டு, அதற்கான கட்டணம், கணக்கில் இருந்து நேரடியாகக் கழிக்கப்படும். இப்போது இந்தியாவில் சுமார் 1.37 லட்சம் வாகனங்களில் இந்த திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் இது நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Central govt plan to collect GPS based toll system: (ஜிபிஎஸ் மூலம் டோல் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டம்) GPS technology to be introduced in toll system.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X