கொரோனா.. மக்கள் கூட்டமாக செல்வது அச்சமூட்டுகிறது.. அமைச்சரவை மீட்டில் கடுகடுத்த மோடி.. பேசியது என்ன?
டெல்லி: மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே செல்வது நல்லதல்ல, இது அச்சமூட்ட கூடிய விஷயம், கொரோனா தடுப்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட கூடாது என்று பிரதமர் மோடி முதல் அமைச்சரவை கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் உட்பட 43 புதிய அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றனர். இந்த நிலையில் இன்று புதிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற மன்சுக் மான்டவியா உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் குறித்தும், அமைச்சர்களின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.

என்ன
இதில் பேசிய பிரதமர் மோடி, அமைச்சர்கள் எல்லோரும் தங்கள் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். முன்னாள் அமைச்சர்களிடம் புதிய அமைச்சர்கள் கலந்துரையாட வேண்டும். அவர்களின் துறை குறித்தும், துறையின் நிலை குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆக்கபூர்வமாக ஆலோசனைகளை செய்து முடிவுகளை எடுக்க வேண்டும்.

மக்கள்
நாம் பேச கூடாது, நம்முடைய செயல்தான் பேச வேண்டும். மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே செல்லும் புகைப்படங்களை நான் பார்த்து வருகிறேன். இதற்கு நல்லதற்கு அல்ல. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், மாஸ்க் அணியாமல் பலர் வெளியே செல்கிறார்கள். இது நமக்கு அச்சத்தை உண்டாக்க கூடிய விஷயம்.

போராட்டம்
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கொரோனா வாரியர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். சர்வதேச பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியாவின் போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்திய மக்களுக்கு நாம் நிலையாக வேக்சின் போட்டு வருகிறோம். சோதனை செய்யப்படும் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது.

வாய்ப்பு
இப்படிப்பட்ட நேரத்தில் கவனக்குறைவு கொண்டு இருக்க கூடாது, அதேபோல் கொரோனாவை வென்றுவிட்டோம் என்ற மனநிறைவு இப்போதே ஏற்பட்டுவிட கூடாது. சின்ன தவறு கூட மோசமான பாதிப்புகளையும், கொரோனா எதிர்ப்பு பணியில் பின்னடைவையும் ஏற்படுத்தும். இரண்டாம் அலை கேஸ்கள் குறைவதால் மக்கள் வெளியே செல்ல விரும்புகிறார்கள்.

ஆனால் என்ன
ஆனால் மக்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். கொரோனா இன்னும் முடியவில்லை. பல நாடுகளில் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. அமைச்சர்கள் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தாமல். அவர்களிடம் கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கேரளா
கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இன்னும் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. முறையான தடுப்பு பணிகளை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மக்களிடம் இது குறித்த தொடர் விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும், என்று பிரதமர் மோடி அமைச்சரவை கூட்டத்தில் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications