தூக்கியடிக்கப்படும் மத்திய அமைச்சர்கள்? மோடி அமைச்சரவை மொத்தமாக மாற போகுது.. முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியானது. அதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தேசிய பொருளாளர் பதவி வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்பது பின்பற்றப்படும் நிலையில், பியூஷ் கோயலுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளதால் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். இந்தச் சூழலில் தான் இன்று புதிய தேசிய நிர்வாகிகளை நிதின் நபின் அறிவித்தார். இதில் அனுபவம் வாய்ந்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ராம் மாதவ் உள்ளிட்ட பலர் மீண்டும் முக்கிய பொறுப்புகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

Narenda Modi Modi cabinet Modi Cabinet Reshuffle

பியூஷ் கோயல்

உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு தேர்தல் நடக்கும் நிலையில், அந்த மாநிலத்திற்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அதேபோல இந்த புதிய பட்டியலில் பியூஷ் கோயல் தேசிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக அவர் இருக்கிறார். அவருக்கு தேசிய பொருளாளர் பதவி தரப்பட்டுள்ளதே இப்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவனிக்க வேண்டியது

ஏனென்றால் பாஜகவில் முக்கியமான கட்சி பொறுப்பையும், முக்கியமான அரசு பதவியையும் ஒருவர் வகிக்கக் கூடாது என்ற 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற நடைமுறை நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா காலகட்டத்தில் இந்த கொள்கை கட்சியில் அதிக முக்கியத்துவம் பெற்றது. அப்படியிருக்கும்போது கேபினெட் அமைச்சராக இருக்கும் கோயலுக்கு தேசிய பொருளாளர் பதவி வழங்கப்பட்டிருப்பது, அமைச்சரவையில் மாற்றம் வருவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

அதேநேரம் அவருக்கு கட்சி பொறுப்பு வழங்கியதால் மட்டுமே அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என உறுதியாக சொல்லிவிட முடியாது. அவரது நிர்வாக மற்றும் பாஜகவில் அவருக்கு இருக்கும் அனுபவத்தை கருத்தில் கொண்டு இந்த பொறுப்பை வழங்கியிருக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், பியூஷ் கோயல் தற்போது அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறார். எனவே, இந்த நேரத்தில் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குவது எந்தளவுக்கு சரியாக இருக்கும் என்பதும் தெளிவாக தெரியவில்லை.

ஒருவருக்கு ஒரு பதவி

மேலும், பாஜகவின் 'ஒருவருக்கு ஒரு பதவி' கொள்கைக்கு விதிவிலக்கு இருந்ததே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. அதற்கு மிக முக்கிய உதாரணம் முன்னாள் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா. 2020ஆம் ஆண்டு பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்ற நட்டாவின் பதவிக்காலம், 2024 லோக்சபா தேர்தல் காரணமாக நீட்டிக்கப்பட்டது. பின்னர், 2024 ஜூன் மாதம் அவர் மத்திய அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் ரசாயனங்கள்-உரங்கள் துறை அமைச்சராக பதவியேற்றார்.

அப்போது அவர் பாஜகவின் தேசிய தலைவர் பதவியையும் தொடர்ந்து வகித்தார். சுமார் 2 ஆண்டுகள் அவர் மத்திய அமைச்சராகவும் இருந்தார். பாஜகவின் தேசிய தலைவராகவும் செயல்பட்டார். 2026 ஜனவரியில் நிதின் நபின் புதிய பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகே நட்டா கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதனால், ஒரே நேரத்தில் கட்சி மற்றும் அரசு பொறுப்புகளை வகிக்கவே முடியாது என்றும் சொல்லிவிட முடியாது.

பதவிகள்

புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலில் ஸ்மிருதி இரானி தேசிய பொது செயலாளராக மீண்டும் முக்கிய பொறுப்புக்கு வந்துள்ளார். முன்னாள் தேசிய பொதுச் செயலாளரான ராம் மாதவ், தேசிய துணைத் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பி.எல். சந்தோஷ் தொடர்ந்து தேசிய பொது செயலாளர் பதவியில் நீடிக்கிறார். வினோத் தாவ்டே, சுனில் பன்சால் ஆகியோரும் தேசிய பொது செயலாளர்களாக தொடர்கின்றனர். இதற்கிடையே இளைஞர் அணித் தலைவராக இருந்த தேஜஸ்வி சூர்யா அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, குஜராத்தை சேர்ந்த ஹேமங் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என்ற பேச்சு கடந்த சில மாதங்களாகவே நிலவி வருகிறது. குறிப்பாக மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே அமைச்சரவையில் மாற்றம் வரலாம் என சொல்லப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் அந்த மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த ஊகங்கள் மீண்டும் வேகம் பெற்றுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+