டிரம்பிற்கு பிறகு கத்தார் அமீரை வரவேற்க விமான நிலையத்திற்கே நேரில் சென்ற பிரதமர் மோடி! ஏன் முக்கியம்
டெல்லி: கத்தார் அமீர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்தானி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் நாளை பிப்ரவரி 18ம் தேதி அதிபர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்கிடையே அரிய நிகழ்வாகப் பிரதமர் மோடி, நேரடியாக விமான நிலையத்திற்கே சென்று கத்தார் அமீர் தமிம் பின் ஹமத் அல்தானியை வரவேற்றார்.
பொதுவாக உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வரும் போது, மத்திய அமைச்சர்கள் தான் விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்பார்கள். மிக முக்கிய தலைவர்களின் வருகையின் போது மட்டுமே பிரதமர் நேரடியாக விமான நிலையத்திற்குச் செல்வார்.

விமான நிலையத்திற்கே சென்ற பிரதமர் மோடி
அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை தந்தபோது நேரடியாக விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்று இருந்தார். இதற்கிடையே பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதேபோல விமான நிலையத்திற்கே நேரில் சென்று ஒரு தலைவரைப் பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். அது வேறு யாரும் இல்லை.. மத்திய கிழக்கு நாடான கத்தாரை சேர்ந்த அமீர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்தானியைதான் பிரதமர் மோடி இப்போது நேரில் சென்று வரவேற்றுள்ளார்.
டெல்லி வந்தடைந்த கத்தார் அமீரை விமான நிலையத்திற்கே நேரில் சென்று பிரதமர் மோடி வரவேற்றார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "எனது சகோதரரான கத்தார் எச் எச் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை வரவேற்க விமான நிலையத்திற்குச் சென்றேன். அவரது இந்தியப் பயணம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். நாளை அவரை நான் நேரில் சந்தித்து ஆலோசிக்கவுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.
வெளியுறவு அமைச்சகம்
இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே நல்லுறவு நிலவும் சூழலில், கத்தார் அமீரின் பயணம் இரு நாட்டு உறவுகளுக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கத்தார் அமீருடன் அந்நாட்டின் முக்கிய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் என மிகப் பெரிய டீம் இந்தியாவுக்கு வந்துள்ளது.
பயணத் திட்டம் என்ன
இன்று இரவு கத்தார் அமீரை வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சந்தித்தார். தொடர்ந்து நாளை செவ்வாய்க்கிழமை காலை, கத்தார் அமீருக்கு ராஷ்டிரபதி பவனில் வரவேற்பு அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து அங்குள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை கத்தார் அமீர் சந்திப்பார். பல்வேறு துறைகள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்கள் ஆலோசிக்கவுள்ளனர்.
மேலும், நாளை மதியம் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது. அதைத் தொடர்ந்து கத்தார் அமீர் நமது நாட்டின் குடியரசுத் தலைவர் முர்முவை சந்திப்பார் எனத் தெரிகிறது
#WATCH | Prime Minister Narendra Modi receives Amir of the State of Qatar, Sheikh Tamim Bin Hamad AL Thani, at the Palam Technical Airport in Delhi.
— ANI (@ANI) February 17, 2025
Amir of the State of Qatar, Sheikh Tamim Bin Hamad AL Thani will be on a State Visit to India on 17-18 February. During his… pic.twitter.com/4laLFgU9CG
இரண்டாவது இந்திய பயணம்
இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதை ஏற்றே கத்தார் அமீர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்தானி இப்போது இந்தியா வந்துள்ளார். இது அவரது இரண்டாவது இந்திய அரசுமுறை பயணமாகும். முன்னதாக அவர் கடந்த 2015 மார்ச் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார்.
இந்தியா மற்றும் கத்தார் இடையேயான நல்லுறவு பல ஆண்டுகளாகத் தொடர்கிறது.. சமீபத்திய ஆண்டுகளில் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், கலாச்சாரம் எனப் பல துறைகளில் இரு நாட்டு உறவு மேம்பட்டே வருகிறது. தற்போது கத்தாரில் வசிக்கும் மிகப் பெரிய வெளிநாட்டுச் சமூகமாக இந்தியர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்!












Click it and Unblock the Notifications