விடிந்தால் போராட்டம்! பிரகாஷ் ராஜை வைத்துக்கொண்டு அபிஜித் சொன்ன வார்த்தை! டெல்லியில் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு ஆதரவாக மத்திய அரசு தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக போர் தொடுத்துள்ளதாக காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) தலைவர் அபிஜித் தீப்கே குற்றம் சாட்டியுள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் மற்றும் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து அவர் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.

PM Modi

பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பாதுகாப்பதற்காக.. ஒட்டுமொத்த அரசு அதிகாரத்தையும், நாட்டின் குடிமக்களுக்கு எதிராக பயன்படுத்தி வருவதாக அபிஜித் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையரின் ராஜினாமாவை வலியுறுத்தி அமைதியாக போராடும் இளைஞர்கள் மற்றும் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்டு சட்டவிரோதமாக காவலில் வைக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

தேர்தல் ஆணையருக்கு எதிராக, ஜந்தர் மந்தர் பகுதியில் இரும்பு தடுப்புகளை தாண்டி போராட்டம் நடத்திய காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்கள்.. சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுடன் கைது செய்யப்பட்ட அஜிங்கியா மட்டும் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே வெறும் 2% வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருப்பதை சுட்டிக்காட்டிய அபிஜித், தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்த பணிகள் அதாவது எஸ்ஐஆர் பணிகள் போது.. சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். உயிரோடு இருக்கும் பலரை இறந்ததாக காட்டி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல மத்திய அரசின் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்கிற முழக்கம் வெறும் போலியானது என்றும், அவர்களின் உண்மையான நோக்கம் 'ஒரே நாடு, ஒரே கட்சி' என்ற சர்வாதிகார ஆட்சி முறை கொண்டு வருவது தான் எனவும் தீப்கே குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், டெல்லிக்கு பக்கத்தில் உள்ள மாநிலங்களிலிருந்து வரும் ரயில்களை ரத்து செய்துவிட்டு, மாவோயிஸ்ட்டு பாதிப்புள்ள பகுதிகளில் இருந்து பாதுகாப்பு படைகளை கொண்டு வந்து, மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் இடதுசாரி மாணவர் தலைவர் நேஹா ஆகியோரும் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை டெல்லியில் மிகப்பெரிய பேரணிக்கு CJP அழைப்பு விடுத்திருக்கிறது. இப்படி இருக்கையில் மத்திய அரசுக்கு எதிராக தீப்கே கடுமையாக பேசியிருப்பது பரவலாக கவனம் பெற்றிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+