தேர்தல் ஆணையமா.. அதுகிடக்கட்டும்.. ஜாலியான பிரதமர் மோடி.. பஜன் கிளப்பில் கைதட்டலுடன் படு உற்சாகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இளைஞர்களுடன் 'பஜன்' கிளப் நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் வரிசையில் அமர்ந்து தம்போரின் இசைக்கருவியுடன் மகிழ்ச்சியுடன் இசை நிகழ்ச்சியை ரசித்தார். தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ள நிலையில் பிரதமர் மோடி ஜாலியாக இசை நிகழ்ச்சியை ரசித்தார்.

பாஜகவின் முந்தைய ஜனசங்கத்தின் தலைவராக இருந்தவர் தீன்தயாள் உபாத்யாயா. இவருக்கு நேற்று 110வது பிறந்தநாள். இந்தியாவில் பல்வேறு இடங்களில் பாஜகவினர் தீன்தயாள் உபாத்யாயாவின் போட்டோவிற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

pm modi deendayal upadhyay

டெல்லியில் பாஜகவின் தேசிய தலைமை அலுவலகத்துக்கு எதிராக உள்ள பூங்காவில் தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளையொட்டிபஜன் கிளப்பிங் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் அதிகளவில் இளைஞர்கள் பங்கேற்றனர். இந்து பக்தி பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். முதல் வரிசையில் போடப்பட்டு இருந்த நாற்காலியில் பிரதமர் மோடி அமர்ந்து மற்றவர்களுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தார்.

இந்த சமயத்தில் பிரதமர் மோடி கைத்தட்டியும், 'தம்போரின்' இசைக்கருவியையும் கையில் வைத்து பாடலுக்கு ஏற்ப தட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் இந்த நிகழ்வில் பெரும்பாலும் இளைஞர்களே பங்கேற்றனர். பிரதமர் மோடி 'தம்போரின்' போன்ற ஒரு இசைக்கருவியை வாசித்ததோடு, ராமர் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பஜனுக்குக் கைதட்டினார்.

குறிப்பாக கடவுள் ராமர் பாடல் பாடியபோது பிரதமர் மோடி கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் தான் அதிகம் பங்கேற்றனர். அவர்கள் பாடல்களுக்கு ஏற்ப கைத்தட்டினர். பஜன் கிளப் என்பது தற்போது டிரெண்ட்டாகி வருகிறது. இளைஞர்கள் பாரம்பரியமான பக்தி பாடல்களை பாடி, ரசிக்கும் நிகழ்வாக உள்ளது.

தற்போது இளைஞர்கள் பலரும் பார்ட்டி, மதுபானம் என்று செல்கின்றனர். இவர்களின் மனநிலையை மாற்றும் வகையில் மதுபானம் இல்லாமல் பக்தி பாடல்களுடன் பஜன் கிளப் நடத்தப்பட்டு வருகிறது. இது தற்போது வடமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் டிரெண்ட்டாகி வருகிறது.

தற்போது நம் நாட்டில் பெரும் பிரச்சனையாக தேர்தல் ஆணைய விவகாரம் சூடுபிடித்துள்ளது. SIR எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் தேர்தல் ஆணையர்களான விவேக் ஜோஷி மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோரின் ஆட்சேபனைகளை கேட்காமல் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்பட்டார். இதனால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கெடி உயர்த்தி உள்ளன. இது மத்திய அரசுக்கு பிரச்சனையாக பார்க்கப்படும் சூழலில் பிரதமர் மோடி ஜென் ஸி இளைஞர்களுடன் பஜன் கிளப் நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+