70 வருடமாக இந்தியா உருவாக்கிய சொத்துக்களை, பிரதமர் மோடி 7 ஆண்டுகளில் விற்றுவிட்டார்: ராகுல் தாக்கு
டெல்லி: கடந்த 70 வருடமாக முந்தைய மத்திய அரசுகள் உருவாக்கிய சொத்துக்களை, பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் பிரதமர் மோடி விற்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
பணமாக்குதல் திட்டம் மூலம் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் தனியார் முதலீட்டை அனுமதித்து அதன் மூலம் லட்சம் கோடி ரூபாயை திரட்டும் முடிவில் மத்திய அரசு இறங்கி உள்ளது. வரும் நாட்களில் பணமாக்குதல் (National Monetisation Pipeline) திட்டம் மூலம் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் கட்டுப்பாட்டிற்கு செல்லும். ஆனால் மொத்தமாக தனியாரிடம் விற்காமல் அவர்களின் முதலீட்டை மட்டும் அனுமதிக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக சென்னை, வாரணாசி உள்பட 25 விமான நிலையங்கள் பணமாக்குதல் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த விமான நிலையங்களில் தனியாரை அனுமதித்து அடுத்த நான்கு ஆண்டுகளில் 20,782 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி தனது பேட்டியில், இந்தியாவில் பல்வேறு முன்னாள் அரசுகள் கஷ்டப்பட்டு உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள், சொத்துக்கள் அனைத்தையும் பிரதமர் மோடி விற்றுவிட்டார். 70 வருடமாக இந்தியா உருவாக்கிய சொத்துக்களை அவர் வெறும் 7 வருடத்தில் விற்றுவிட்டார். தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு இந்திய நிறுவனங்களை மோடி விற்று வருகிறார்.

மக்கள் பணம்
மக்கள் பணத்தில் இந்தியாவின் ஆபரணங்களாக கருதப்பட்ட இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது. 70 வருடமாக அரசு கஷ்டப்பட்டு உருவாக்கிய நிறுவனங்கள் தற்போது தனியார்வசம் சென்றுள்ளது. அரசு துறையில் ஒரு சில தனியார் நிறுவனங்களை மட்டும் அனுமதித்து, அவர்களின் ஆதிக்கத்தை வளர்த்துவிட்ட பிரதமர் மோடி அரசு நினைக்கிறது. இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.

மக்கள் வேலைவாய்ப்பு
இதனால் மக்களின் வேலைவாய்ப்புதான் பாதிக்கப்படும். தனியார் நிறுவனங்கள் கோலோச்சுவதால் வேலைவாய் குறையும். இளைஞர்களின் வேலை வாய்ப்பு ஏற்கனவே பறிக்கப்பட்டுவிட்டது, விவசாய சட்டங்கள் மூலம் விவசாயிர்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டது. தனது சில பணக்கார நண்பர்கள் பலன் அடைய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பிரதமர் மோடி இது போன்ற திட்டங்களை கொண்டு வருகிறார். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான கோபுரங்கள், விமான நிலையங்கள் எல்லாம் இனி தனியார் கட்டுப்பாட்டில் இருக்கும்.

குத்தகை
இதை வெறுமனே குத்தகைக்கு மட்டுமே விடுகிறோம் என்று மத்திய அரசு விளக்கம் வேறு கொடுத்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தை இவர்கள் பாழாக்கிவிட்டனர். அவர்களுக்கு இதை எப்படி மீட்பது என்று தெரியவில்லை. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வழிகள் அவர்களுக்கு தெரியவில்லை. இப்போது வேறு வழியின்றி அனைத்தையும் தனியாரிடம் கொடுக்கிறார்கள். என்னை கேட்டால் இதை மோசமான சூழ்நிலை என்றுதான் குறிப்பிடுவேன்.

மோசம்
நாங்கள் மொத்தமாக தனியார்மயமாக்கலுக்கு எதிரி கிடையாது. நாங்கள் இது போன்ற தனியார்மயமாக்கல் திட்டங்களை கொண்டு வந்த போது அதில் லாஜிக் இருந்தது. முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு நாங்கள் தாரைவார்க்கவில்லை. ரயில்வே போன்ற நிறுவனங்களை நாங்கள் தனியாருக்கு கொடுக்கவில்லை. இங்கே பல லட்சம் பேர் வேலை பார்க்கிறார்கள். ஆனால் பாஜக இதை தனியாரிடம் தாரை வார்க்கிறது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர்












Click it and Unblock the Notifications