அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு பறந்த அழைப்பு.. மோடியுடன் நேரடியாக பேசிய கமலா ஹாரிஸ்!
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் பேசினார், உலக நாடுகளுக்கு தடுப்பூசியை நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளது அமெரிக்கா. இதுபற்றி பேசவே அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினார். அப்போது பிரதமர் மோடி, தடுப்பூசி அளித்து ஒத்துழைப்பு அளித்த அமெரிக்க அரசிற்கு நன்றி தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 0 மில்லியன் கோவிட் -19 தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். அதில் 25 மில்லியன் தடுப்பூசிகளை அமெரிக்கா பிற நாடுகளுக்கு பகிர்ந்து கொள்ளும் என்றும் கூறினார்.
கோவாக்ஸ் வசதி மூலம் அமெரிக்கா தனது கோவிட் -19 தடுப்பூசியில் கிட்டத்தட்ட 19 மில்லியன் டோஸ் நன்கொடை அளிக்கும் என்றும் அதிபர் ஜோ பைடன் ஒரு அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

25 மில்லின் டோஸ்
அதாவது கோவாக்ஸ் மூலம், சுமார் 6 மில்லியன் டோஸ் லத்தீன் அமெரிக்கா நாடுகள் மற்றும் கரீபியன் நாடுகளுக்கும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு 7 மில்லியன் டோஸ்களும் வழங்கப்பட உள்ளது. ஆப்பிரிக்காவிற்கு சுமார் 5 மில்லியன் டோசும் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள சுமார் 6 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் அமெரிக்காவிலிருந்து நேரடியாக கனடா, மெக்ஸிகோ, இந்தியா மற்றும் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் என்று அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார்.

மோடியுடன் பேச்சு
இந்நிலையில் உலக நாடுளுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாகவும், மருந்து பொருட்கள் உற்பத்தி, தடுப்பூசி உற்பத்தி ஆகியவற்றில் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறித்து உலக நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேசினார். பிரதமர் நரேந்திர மோடியுடன் கமலா ஹாரிஸ் பேசினார்.

பிரதமர் மோடி நன்றி
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ட்வீட் பதிவில், "இந்தியா-அமெரிக்க தடுப்பூசி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள்" குறித்து விவாதித்தோம். சிறிது நேரத்திற்கு முன்னர் என்னிடம் அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸிடம் பேசினார். உலகளாவிய தடுப்பூசி பகிர்வுக்கான அமெரிக்க வியூகத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான உத்தரவாதத்தை நான் மிகவும் பாராட்டினேன்.

வேக்ஸின் ஒத்துழைப்பு
"அமெரிக்க அரசு, வணிகங்கள் மற்றும் இந்திய புலம்பெயர்ந்தோர் அளித்த ஆதரவு மற்றும் ஒற்றுமைக்காவும் கமலா ஹரிஸுக்கு நன்றி தெரிவித்தேன். பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையே வேக்ஸின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் குறித்தும், கோவிட்-க்குப் பிந்தைய உலகளாவிய சுகாதாரம் மற்றும் பொருளாதார மீட்சிக்கு பங்களிப்பு செய்வதற்கான எங்கள் கூட்டாண்மைக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்" இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மெக்ஸிகா ஜனாதிபதி
பிரதமர் மோடிக்குப் பிறகு, கமலா ஹரிஸ் மெக்ஸிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர், குவாத்தமாலாவின் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ கியாமட்டே மற்றும் கரீபியன் நாட்டின் (கேரிகாம்) தலைவர் பிரதமர் கீத் ரோவ்லி ஆகியோருடனும் தடுப்பூசிகள் விநியோகம் குறித்து பேசினார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications