குவாட் தலைவர்கள் உச்சி மாநாடு... பிரதமர் மோடி நாளை ஜப்பான் பயணம்
டெல்லி: குவாட் அமைப்பு தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை ஜப்பான் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: ஜப்பான் பிரதமர் மேதகு திரு ஃப்யூமியோ கிஷிடாவின் அழைப்பை ஏற்று குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி மே 24, 2022 அன்று அமெரிக்க அதிபர் ஜோசப் ஆர் பைடன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமருடன் கலந்து கொள்வார்.
மார்ச் 2021-இல் குவாட் தலைவர்களின் முதல் கூட்டம் காணொலி வாயிலாகவும், செப்டம்பர் 2021-இல் வாஷிங்டன் டி.சி.யில் இரண்டாவது உச்சிமாநாடு நேரடியாகவும், மார்ச் 2022-இல் மூன்றாவது கூட்டம் காணொலி வாயிலாகவும் நடைபெற்றது.

இந்தோ-பசிபிக் பகுதியில் வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் பரஸ்பர நலனின் சர்வதேச விஷயங்கள் முதலியவற்றில் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பை வரவிருக்கும் உச்சிமாநாடு வழங்கும்.
குவாட் முன்முயற்சிகள் மற்றும் செயற்குழுக்களின் முன்னேற்றத்தை தலைவர்கள் ஆய்வு செய்வதோடு, ஒத்துழைப்புக்கான புதிய துறைகளைக் கண்டறிந்து, எதிர்கால கூட்டணிக்கான கேந்திர வழிகாட்டுதல் மற்றும் தொலைநோக்குப் பார்வையையும் அவர்கள் வழங்குவார்கள்.
ஜப்பான் பிரதமர் ஃப்யூமியோ கிஷிடாவுடன் பிரதமர் நரேந்திர மோடி மே 24-ஆம் தேதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார். கடந்த மார்ச் மாதம் ஜப்பான் பிரதமர் இந்தியா வந்திருந்தபோது நடைபெற்ற 14-வது இந்திய- ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டின்போது நடைபெற்ற கலந்துரையாடலை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பை இந்த சந்திப்பு இரு தலைவர்களுக்கும் அளிக்கும். இந்தப் பயணத்தின் போது ஜப்பான் நாட்டின் தொழில்துறை தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடுவதுடன், அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தினரையும் சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றுவார்.
மே 24-ஆம் தேதி அன்று அமெரிக்க அதிபர் ஜோசப் ஆர். பைடனுடனும் இருதரப்பு பேச்சுவார்த்தையை பிரதமர் மேற்கொள்வார். அண்மையில் ஏப்ரல் 11-ஆம் தேதியன்று காணொலி வாயிலாக இரு தலைவர்களும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு அமையும். இந்திய-அமெரிக்க கேந்திர கூட்டுமுயற்சியை இரு தலைவர்களும் அப்போது ஆய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் மே 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருப்பதால் அதில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமருடன் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தக்கூடும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது..
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications