டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2024 தேர்தல்.. எதிர்கட்சிகள் இதை பண்ணலைனா.. பாஜக ரிப்பீட்டு! ஐடியாக்களை அள்ளி வீசிய பிரசாந்த் கிஷோர்

Google Oneindia Tamil News

டெல்லி: உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இது குறித்தும் 2024 மக்களவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளின் திட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்,

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவே ஆளும்கட்சியாக உள்ளது.

அமராவதி ஆற்றில் 6 பேர் இறப்புக்கு காரணமே இதுதான்.. திமுக மீது ஓ.பி.எஸ் பகீர் புகார்.. பரபர அறிக்கைஅமராவதி ஆற்றில் 6 பேர் இறப்புக்கு காரணமே இதுதான்.. திமுக மீது ஓ.பி.எஸ் பகீர் புகார்.. பரபர அறிக்கை

குறிப்பாக நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமாக உள்ள உத்தரப் பிரதேசத்தை பாஜக தனது கோட்டையாகவே கருதுகிறது. இதனால் தேர்தல் பணிகள் பாஜக மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

 5 மாநில தேர்தல்

5 மாநில தேர்தல்

இந்த 5 மாநில தேர்தலைச் சிலர் 2024 மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டம் என்றும் குறிப்பிடுகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தச் சூழலில் தனியர் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்த பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், 5 மாநில தேர்தல் குறித்தும் தான் காங்கிரஸ் கட்சியில் இணைய நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்தும் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்,

காங்கிரஸ்

காங்கிரஸ்

இது குறித்து அவர் கூறுகையில், "மேற்கு வங்க தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாக நான் அதிகம் பேச்சுவார்த்தை நடத்தினேன். குறிப்பாகக் கடந்த மே மாதம் முதல் செப். வரை கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் இந்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை எதோ இப்போது தொடங்கியதை போலச் சிலர் குறிப்பிடுகின்றனர். சொல்லப்போனால் நான் காங்கிரஸ் தலைமையுடன் கடந்த 2 ஆண்டுகளாகவே இது குறித்து ஆலோசித்து வருகிறேன்.

 2017 உபி தேர்தல்

2017 உபி தேர்தல்

வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நானும் காங்கிரஸும் வந்து இணைந்து பணியாற்றுவது தான் இயல்பானதாகத் தெரிகிறது. ஆனால் இரு தரப்பும் இணைந்து செயல்பட நம்பிக்கை அடிப்படையில் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால், அது காங்கிரஸில் நடக்கவில்லை. சில விஷயங்களில் எங்களால் ஒத்த முடிவுகளை எடுக்க முடியவில்லை. உதாரணமாக, கடந்த 2017 உ.பி. தேர்தலில் நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மோசமான அனுபவமாக இருந்தது. அதனால் நான் கூடுதல் சந்தேகங்கள் ஏற்பட்டன. என் கைகளைக் கட்டியிருப்பதை நான் விரும்பவில்லை.

 காங்கிரஸ் மறுதொடக்கம்

காங்கிரஸ் மறுதொடக்கம்


எனது பின்னணி கருத்தில் கொண்டு நான் 100% அவர்களுக்கு உண்மையாக இருப்பேனா என்று காங்கிரஸ் தலைமை சந்தேகம் கொண்டதிலும் கூட நியாயம் இருக்கவே செய்கிறது. ஆனால், இதையெல்லாம் தாண்டி நான் காங்கிரஸ் கட்சியில் இணையவே இருந்தேன். இது ஒரு குறிப்பிட்ட தேர்தலைப் பற்றியது அல்ல. 2024 தேர்தலுக்காகக் கூட இல்லை. இது காங்கிரஸ் கட்சியை மறுதொடக்கம் செய்வது பற்றியது

 90% உடன்பாடு

90% உடன்பாடு

இது குறித்து நடந்த ஆலோசனையில் கிட்டதட்ட 90% விஷயங்களில் எங்கள் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. நான் காங்கிரஸைப் உண்மையாகவே முக்கியமானதாகப் பார்க்கிறேன். அவர்கள் இல்லாமல் எதிர்க்கட்சி என்பது சாத்தியமில்லை. ஆனால், இதற்கு தற்போதைய தலைமையின் கீழ் இருக்கும் அதே காங்கிரஸாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. இதற்குப் பழிவாங்கும் வகையில் நான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதாகக் கூட சிலர் கூறுகின்றனர். ஆனால், அதில் உண்மை இல்லை. காங்கிரஸ் போன்ற பெரிய கட்சியை என்னால் பழிவாங்க முடியாது.

 2024 தேர்தல்

2024 தேர்தல்

வரும் 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும். ஆனால், அதற்குக் காங்கிரஸ் கட்சியை நாம் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இப்போது இருக்கும் எதிர்க்கட்சிகளை வைத்துக் கொண்டு பாஜகவை வீழ்த்துவது சந்தேகம் தான். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள நம் நாட்டில் வலுவான எதிர்க்கட்சி தேவை என்றே நான் நினைக்கிறேன். சித்தாந்த ரீதியாகக் காங்கிரஸ் பலவீனமடைய நாம் அனுமதிக்கக் கூடாது. அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

திட்டம்

திட்டம்

பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் சுமாராக 200 லோக்சபா இடங்கள் உள்ளது. அதில் பாஜகவால் சொற்ப இடங்களில் மட்டுமே வெல்ல முடிகிறது. மீதமுள்ள 350 இடங்களில் தான் பாஜக மாபெரும் வெற்றியைப் பெறுகிறது. எனவே, எதிர்க்கட்சிகள் தங்கள் திட்டத்தை இதற்கு ஏற்ப மாற்ற வேண்டும். வியூகங்களை மாற்றி அமைத்தால் தான் எதிர்க்கட்சிகளா அதிக இடங்களை வெல்ல முடியும்" என்றார்

English summary
Election strategist Prashant Kishor says it is possible to defeat BJP in 2024 election. Prashant Kishor explains why his talks to team up with the Congress failed to take off.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X