டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முத்தலாக் சட்டம் அமலுக்கு வந்தது.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்.. அரசிதழிலும் வெளியீடு!

முத்தலாக் தடை சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து அச்சட்டம் முறையாக அமலுக்கு வந்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: முத்தலாக் தடை சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து அச்சட்டம் முறையாக அமலுக்கு வந்துள்ளது.

முத்தலாக் தடை சட்ட மசோதா இரண்டு நாட்களுக்கு முன் ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர். 84 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

President Ramnath Govind accends Triple Talaq: Officially becomes law now

அதன்பின் இந்த மசோதா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன் ஒப்புதலுக்காக சமர்பிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் முத்தலாக் தடை சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்ததுள்ளது.

சர்ச்சைக்குரிய உபா சட்ட திருத்த மசோதா.. நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படுகிறது! சர்ச்சைக்குரிய உபா சட்ட திருத்த மசோதா.. நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படுகிறது!

இந்த சட்டம் மூலம் குற்றம் நிருபிக்கப்பட்ட ஆண் 3 ஆண்டு சிறையில் அடைக்கப்படுவார். இந்த முத்தலாக் தடை சட்டம் மூலம் மனைவி தனது கணவன் மீது புகார் கொடுக்கலாம். அல்லது அந்த பெண்ணின் ரத்த உறவினர்கள், திருமணம் மூலம் உண்டான உறவினர்கள் புகார்கள் கொடுக்கலாம்.

இது தொடர்பான அரசு ஆணை தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
President Ramnath Govind accends Triple Talaq: Officially the bill becomes law now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X