சுழன்றடிக்கும் சர்ச்சை! தீவிரமாகும் போராட்டங்கள்! என்ன செய்யலாம்? நாளை பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!
டெல்லி : அக்னிபத் திட்டம் தொடர்பான போராட்டங்கள் மற்றும் கடும் சர்ச்சைகளுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி நாளை ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ஆயுதப்படையை பலப்படுத்துவதன் ஒரு பகுதியாக, முப்படைகளில் இளம் வீரர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான புதிய 'அக்னிபத்' ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது.
இத்திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள்.

கடும் எதிர்ப்பு
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், ஹரியானா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. சில இடங்களில் போராட்டம் தீவிரமடைந்ததால், போராட்டக்காரர்கள் ரயில்களுக்கு தீ வைத்தனதோடும் சாலையில் சென்ற வாகனங்களை எரித்து, தனியார் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தினர்.

தீவிரமடையும் போராட்டம்
நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் போராட்டங்களால் நாட்டின் பல பகுதிகளில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் மொத்தம் 491 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் அக்னிபாத் திட்டம் குறித்து மத்திய அரசு சார்பில் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் போராட்டக்காரர்கள் அதனை ஏற்றுக் கொள்வதாக இல்லை.

ஆட்சேர்ப்பு நடவடிக்கை
ஆனாலும் அதனை கண்டு கொள்ளாமல 4 ஆண்டுகளுக்கு மட்டும் இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் இணையும் அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படை மற்றும் கப்பல் படையில் இணைவதற்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. தற்போது சேர்க்கை முதல், சீருடை, ஊதியம், இன்ஸ்சூரன்ஸ், விடுமுறை ஆகிய தகவல்களுடன் 29 வகையான விளக்கங்கள் மற்றும் விதிமுறைகள் இந்த பட்டியலில் உள்ளன. ஏற்கனவே அக்னிபாத் திட்டம் விலக்கிக் கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தற்போது ஆட்சேர்ப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதால் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.

பிரதமர் ஆலோசனை
இந்நிலையில் அக்னிபத் திட்டம் தொடர்பான போராட்டங்கள் மற்றும் கடும் சர்ச்சைகளுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி நாளை ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது, முப்படைகள் தலைவர்களும் தனித்தனியாக பிரதமரைச் சந்தித்து, அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டம் குறித்து அவரிடம் விவரிப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications