டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூட் மாற்றி.. மத்திய டெல்லி வரை முன்னேறிய விவசாயிகள்.. தடுப்பை தாண்டி ஓடிய போலீசார்.. பரபரப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: அனுமதிக்கப்பட்ட பாதையை தவிர்த்து விட்டு மத்திய டெல்லி வரை விவசாயிகளின் டிராக்டர் பேரணி வந்ததால் பதற்றம் நிலவியது.

மத்திய டெல்லியின், ஐடிஓ சந்திப்பு பகுதிவரை முன்னேறிய விவசாயிகளை தடுப்பதற்காக சாலையின் குறுக்கே காவல்துறையினர் பேருந்துகளை நிறுத்தி இருந்தனர். ஆனால் அங்கு வந்த விவசாயிகள் பேருந்துகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

Protesters break barricade, attack police personnel in Delhi

பெரிய அளவிற்கு கைகளில் வாள் மற்றும் கொடி கம்பங்கள் உடன் விவசாயிகள் வந்தனர். சிறிய அளவில் காவல்துறையினர் இருந்ததால் அச்சமடைந்து அவர்கள் ஓடினர். அவர்களை விரட்டிச் சென்று விவசாயிகளில் சிலர் அடித்தனர். கம்புகளால் தாக்கினார். இதையடுத்து காவல்துறையினர் சாலைத் தடுப்புகளை ஏறி குதித்து அருகே இருந்த மைதானத்துக்குள் ஓடிச் சென்றனர்.

ஐடிஓ சந்திப்பு என்பது தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இருக்கக்கூடிய பகுதி. காவல்துறை தலைமை அலுவலகம் உள்ள பகுதி. பல்வேறு விஐபிகள் வீடுகள் இருக்கக்கூடிய பகுதியாகும். இந்த பகுதியில் பேரணி நடத்துவதற்கு விவசாயிகளுக்கு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், அவர்கள் சிலர் தடையை தாண்டி உள்ளே வந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. மத்திய டெல்லி வரை விவசாயிகள் சிலர் பேரணி நடத்தி உள்ளதால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.

இதையடுத்து அந்த இடத்திற்கு கூடுதல் காவல்துறையினர் சென்றனர். போராட்டக்காரர்களை விரட்ட கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். விவசாயிகள் மீது தடியடியும் நடத்தப்பட்டது.

English summary
Protesters break barricade, attack police personnel and vandalise police vehicle at ITO in central Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X