எல்லா மதங்களையும் மதிக்கிறோம்! அறிக்கை விட்ட பாஜக! சம்மன் அனுப்பிய கத்தார்! நுபுரால் வந்த வினை!
டெல்லி : நபிகள் நாயகம் தொடர்பான சர்ச்சை கருத்து காரணமாக பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி எனவும், எந்த மதத்தை அவமதிப்பதையும் ஏற்க முடியாது என பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து உரிய விளக்கமளிக்க இந்திய தூதருக்கு கத்தார் சம்மன் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி ஒன்று விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் சில கருத்துக்களை தெரிவித்ததாக பகீர் புகார் எழுந்தது.
Recommended Video
இதையடுத்து பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் பேச்சுக்கு இஸ்லாமிய மக்கள், மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் தங்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர் மேலும் அரபு நாடுகளிலும் இந்த பேச்சு எதிரொலித்தது.

சர்ச்சை பேச்சு
சமூக வலைதளங்களில் பாஜக-வுக்கு எதிராக பல்வேறு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு நிலையில் பாஜகவின் டெல்லி நிர்வாகியான நவீன்குமார் ஜிந்தால் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து வழிவிட்டார் இதனைத் தொடர்ந்து இந்த சர்ச்சையும் சேர்ந்து கொள்ள பலர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து நிலையில் இந்த சர்ச்சை பெரிய விவகாரமாக வெடித்தது. இதனால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

பெரும் பரபரப்பு
இந்நிலையில் நுபுர் சர்மாவுக்கு எதிராக மத மோதலை தூண்டும் விதமான பேச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மகாராஷ்டிரா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவரது பேச்சின் விளைவாக உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மத மோதல் வெடித்தது. பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், டெல்லி பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பாஜக மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது.

பாஜக அறிக்கை
கான்பூர் வன்முறை சம்பவம் தொடா்பாக 24 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 800க்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி எனவும், எந்த மதத்தை அவமதிப்பதையும் ஏற்க முடியாது என பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், "எந்த மதத்தையோ, பிரிவையோ அவமதிக்கும் விதமான பேச்சை பாஜக ஒருபோதும் ஏற்காது. இது போன்று பேசுபவர்களை பாஜக ஒருபோதும் அங்கீகரிக்காது. ஆயிரம் ஆண்டு இந்திய வரலாற்றில் அனைத்து மதங்களும் வளர்ந்து தழைத்தோங்கின.

ஒற்றுமை வேண்டும்
பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது. மதத்தை இழிவுபடுத்துபவர்களை பாஜக நிராகரிக்கிறது. இந்திய குடிமக்கள் அனைவரும் தங்கள் விருப்பப்படி மரியாதையுடன் அவர்களின் மதங்களை பின்பற்ற அரசியல் சாசனம் உரிமை அளித்துள்ளது. இந்தியா தனது 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், அனைவரும் ஒற்றுமையுடனும் கண்ணியத்துடனும் வாழ்ந்து, நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அனுபவிக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது" என அந்த அறிக்கையில் அருண் சிங் கூறியுள்ளார்.

கத்தார் சம்மன்
இந்நிலையில் நபிகள் நாயகம் தொடர்பான சர்ச்சை கருத்து காரணமாக பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து உரிய விளக்கமளிக்க இந்திய தூதருக்கு கத்தார் சம்மன் அனுப்பியுள்ளது. இதனையடுத்து இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவ்விவாகரம் குறித்து இந்திய தூதர் கத்தார் அதிகாரிகளிடம் கூறுகையில், "இழிவான ரீமாவை செய்தவர்கள் மீது ஏற்கனவே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.:" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications