டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிஎம் கேர்ஸ் நிதி தொடர்பாக ... 'வணக்கம்' என தமிழில் பிரதமரை கலாய்த்த ராகுல் காந்தி!

Google Oneindia Tamil News

டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதி அமைப்பு தொடர்பாக பத்திரிக்கை நிறுவனம் செய்தி வெளியிட்டது.அந்த செய்தியை டுவிட்டரில் இணைத்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பிஎம் கேர்ஸ்; வெளிப்படைத்தன்மைக்கு வணக்கம் என தமிழில் பிரதமரை கிண்டல் செய்து கருத்து கூறியுள்ளார் .பிஎம் கேர்ஸ் நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இதேபோல் பல்வேறு எதிர்க்கட்சிகளும் பிஎம் கேர்ஸ் நிதி குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. இங்கு குவிந்துள்ள நிதி எங்கே? யாருக்கு செலவிடப்படுகிறது என கேள்வி எழுப்பி வருகின்றன.

Rahul Gandhi criticises PM Cares Fund

கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது, அதனை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரிய பிரதமர் மோடி பிஎம் கேர்ஸ் (PM Cares Fund) என்ற நிதி அமைப்பை தொடங்கினார். இதற்கு நிதியளிப்பவர்களுக்கு வருமான விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதன் தலைவராக பிரதமர் இருப்பார். பாதுகாப்பு துறை, உள்துறை, நிதித்துறை அமைச்சர்கள் இதன் உறுப்பினர்களாக இருப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு பல்வேறு பிரபலங்கள், தொழில் அதிபர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்ததால் பிஎம் கேர்ஸ்க்கு பல்லாயிரம் கோடி நிதி குவிந்ததாக கூறப்படுகிறது. பி.எம் கேர்ஸ் தொடங்கப்பட்ட ஒரு வாரத்தில் மட்டுமே, ரூ.6,500 கோடி நிதி திரண்டதாக செய்திகள் வெளியாகின.

இயற்கைப் பேரிடர் நிவாரணத்துக்காக ஏற்கனவே 'பிரதமர் தேசிய நிவாரண நிதி' இருக்கும்போது, பி.எம்.கேர்ஸ் எதற்கு என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இங்கு குவியும் நிதிகள் எங்கு? யாருக்கு செலவழிக்கப்படுகிறது? இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டாலும் இதற்கான பதில் கிடைக்கவில்லை என புகார்கள் கூறின.

நிலவில் சீனா புதிய சாதனை... உலக நாடுகளின் போட்டி களமாக மாறியுள்ள நிலவு!நிலவில் சீனா புதிய சாதனை... உலக நாடுகளின் போட்டி களமாக மாறியுள்ள நிலவு!

பிஎம் கேர் நிதி மக்களுக்கு, வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், அங்குள்ள நிதி எங்கு செல்கிறது? எனவும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால பிஎம் கேர்ஸ் நிதியில் அரசு வெளிப்படைதன்மையுடன் செயல்படுகிறது என மத்திய அரசு கூறி வருகிறது.

இந்த நிலையில் பி.எம். கேர்ஸ் நிதி மீது பல சந்தேகங்கள் உள்ளன. இது அரசாங்க நிதி அமைப்பா? அல்லது தனியார் நிறுவன அமைப்பா? என்று அரசு தெளிவுபடுத்த இல்லை என தனியார் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. அந்த செய்தியின் தலைப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் இணைத்ததுள்ள ராகுல்காந்தி, ''பிஎம் கேர்ஸ்: வெளிப்படத்தன்மைக்கு வணக்கம் " என தமிழில் பிரதமரை கிண்டல் செய்துள்ளார். மேலும் பிரதமர் மோடி வணக்கம் சொல்வது போன்ற படத்தையும் அதில் இணைத்துள்ளார்.

English summary
Congress MP Rahul Gandhi has taken to Twitter to comment on the PM Cares fund
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X