டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிஸ்டம் ஃபெயிலியர்.. அரசியலை விட்டுவிட்டு; மக்களுக்கு உதவ வாருங்கள்.. காங்கிரஸாருக்கு ராகுல் அழைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் நிர்வாக முறை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டதாகவும், இதனால் அரசியல் பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு மக்களுக்கு உதவ முன் வர வேண்டும் எனவும் காங்கிரஸாருக்கு ராகுல் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுவே காங்கிரஸ் குடும்பத்தின் தர்மம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Rahul Gandhi says, I request my Congress colleagues to leave all political work, provide all help

இந்தியாவில் கொரோனா 2-வது அலை காற்றை விட வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் பலவும் கவலை தெரிவித்துள்ளன. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் திணறி வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், '' சிஸ்டம் தோல்வியடைந்துவிட்டது. இந்த தருணத்தில் மக்களின் நலன் குறித்து பேசுவதே சிறந்தது.''

''தேசம் எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான தருணத்தில் பொறுப்புள்ள குடிமகன்களே தேவை. காங்கிரஸ் கட்சியில் உள்ள எனது நண்பர்களிடம் நான் கேட்பது என்னவென்றால், அரசியல் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உதவிக்காக தவிக்கும் மக்களுக்கு உதவுங்கள். இதுவே காங்கிரஸ் குடும்பத்தின் தர்மம்'' எனக் கூறியுள்ளார்.

கொரோனா 2-வது அலையின் தாக்கத்தில் இருந்து விரைவில் மீள்வோம் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில் ராகுல் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தொடர்ந்து ராகுல் தனது கருத்துக்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் புறக்கணிப்பு- ஆரிய வன்மம், ஆறா சினம்... எதிர்விளைவுகளை பாஜக அறுவடை செய்யும்... சீமான் சீற்றம் தமிழ் புறக்கணிப்பு- ஆரிய வன்மம், ஆறா சினம்... எதிர்விளைவுகளை பாஜக அறுவடை செய்யும்... சீமான் சீற்றம்

இதனிடையே தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியாகியுள்ள புகைப்படத்தை பதிவிட்டு, கொரோனா உயிரிழப்புகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு விவகாரத்தை மூடி மறைக்கும் வேலைகளில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதாகவும் ராகுல் விமர்சித்துள்ளார்.

English summary
Rahul Gandhi says, I request my Congress colleagues to leave all political work, provide all help
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X