100 ஜென்மம் எடுத்தாலும்.. ரஜினியாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்! - நெகிழ்ந்து பேசிய ரஜினிகாந்த்
பனாஜி: கோவில் இன்று நடைபெற்ற 56வது சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌவரவிக்கப்பட்டிருக்கிறது. திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
விருதை பெற்றுக்கொண்டு பேசிய ரஜினிகாந்த், "இந்திய சினிமாவில் 50 ஆண்டுகள் பணியாற்றியதற்காக எனக்குக் கவுரவம் அளித்த மத்திய அரசுக்கும், கோவா அரசுக்கும் நன்றி.

50 ஆண்டுகள் ஒரு நொடியில் கடந்துவிட்டதுபோல் உணர்கிறேன், ஒருவேளை நடிப்பு மீது எனக்கு இருந்த அளவு கடந்த காதல்தான் இதற்குக் காரணமாக இருக்கலாம். 100 ஜென்மம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு நடிகராகவும், ரஜினிகாந்தாகவும் மீண்டும் பிறக்க நான் உண்மையாகவே விரும்புகிறேன்" என்று கூறினார்.
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் ரஜினிகாந்திற்கு இந்த விருதை வழங்கினர். ரஜினிகாந்த் தனது இருக்கைக்குத் திரும்பும்போது, ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தி, கரவொலி எழுப்பியது. இந்த விழாவில் குரு தத், ராஜ் கோஸ்லா, ரித்விக் கடக், பி. பானுமதி, பூபேன் ஹசாரிகா, சலில் சௌத்ரி போன்ற பல கலைஞர்களின் நூற்றாண்டு விழாக்களும் கொண்டாடப்பட்டன. அவர்களின் கிளாசிக் படங்களும் திரையிடப்பட்டன.
இந்த நிகழ்வில் 13 உலக திரைப்படங்களும், 5 சர்வதேச திரைப்படங்களும், 44 ஆசிய திரைப்படங்களும் திரையிடப்பட்டன. இது அண்மைக் காலங்களில் நடைபெற்ற விழாக்களிலேயே மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications