மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை- அரசியல் சாசனத்தில் உரிமை உண்டு: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை என்றும் அரசியல் சாசனத்தின் கீழ் மதம் மாறுவதற்கு உரிமை உண்டு என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் அஸ்வினி உபாத்யாய டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், பரிசுப் பொருட்கள் கொடுத்து மதம் மாற்றுவது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இம்மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா, துஷார் ரவ் கெடீலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் போது நீதிபகள், ஒருவரை கட்டாயமாக மதமாற்றம் செய்வது என்பது வேறு. அதேநேரத்தில் ஒருவர் தாம் விரும்புகிற மதத்தை பின்பற்ற அரசியல் சாசனம் உரிமை தருகிறது.

Religious conversion not prohibited: Delhi High Court

கட்டாய மதமாற்றம் நடைபெறுகிறது என்பதற்கான தரவுகளை வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய தாக்கல் செய்யவில்லை. சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை நீதிமன்றம் ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்வுகளைக் கூட நேற்று நடந்ததாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.

மதமாற்றம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் 3 தீர்ப்புகளை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். இதரவை அனைத்தும் அவரது அனுமானங்கள். ஆகையால் எதன் அடிப்படையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டது என்பதை விளக்க வேண்டும் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+