இந்தியாவில் மத சுதந்திரம் மிக மோசம்.. அமெரிக்க மத சுதந்திர ஆணையம் மீண்டும் குற்றச்சாட்டு
டெல்லி: இந்தியாவில் மத சுதந்திரம் என்பது மிக மோசமாக உள்ளது என அமெரிக்காவின் மத சுதந்திரம் தொடர்பான ஆணையம் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
U.S. COMMISSION ON INTERNATIONAL RELIGIOUS FREEDOM என்கிற ஆணையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள்:

ஊபா சட்டம் ஏவல்
2021-ம் ஆண்டில் இந்தியாவில் மதசுதந்திரம் என்பது மிக மோசமானதாக இருந்தது. மத்தியில் ஆளும் அரசு இந்துத்துவா கொள்கையை செயல்படுத்த முனைந்ததால் முஸ்லிம்கள்,தலித்துகள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட பிரிவினரிடையே எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது. 2021-ம் ஆண்டில் மத சிறுபான்மையினர் மற்றும் மதசிறுபான்மையினருக்கான ஆதரவு குரல்களை இந்திய அரசு ஒடுக்கியது. ஊபா உள்ளிட்ட சட்டங்களை ஏவி விட்டது மத்திய அரசு.

ஸ்டேன் சுவாமி மரணம்
ஆதிவாசிகள், தலித்துகள் மேம்பாட்டுக்காக பாடுபட்ட பாதிரியார் ஸ்டேன் சுவாமி ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் சிறையிலேயே 2021-ல் மரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்த முஸ்லிம் மனித உரிமை வழக்கறிஞர் குரம் பர்வேஸ் உள்ளிட்ட பலர் ஒடுக்குமுறைக்குள்ளாகினர். ஆதிவாசிகள், தலித்துகள் மேம்பாட்டுக்காக பாடுபட்ட பாதிரியார் ஸ்டேன் சுவாமி ஊபா சட்டத்தின் கைது செய்யப்பட்டார். அவர் சிறையிலேயே 2021-ல் மரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்த முஸ்லிம் மனித உரிமை வழக்கறிஞர் குரம் பர்வேஸ் உள்ளிட்ட பலர் ஒடுக்குமுறைக்குள்ளாகினர்.

சிறுபான்மையினர் மீது ஒடுக்குமுறை
திரிபுராவில் மசூதிகள் மீதான தாக்குதல்கள் குறித்து ட்விட்டர் பதிவிட்டவர்கள் மீது கூட ஊபா சட்டங்கள் பாய்ந்துள்ளன. இந்தியாவில் ஊபா சட்டம் ஏவிவிடப்பட்டிருப்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்திருந்தது. எப்.சி.ஆர்.ஏ சட்டத்தின் கீழ் தன்னார்வ நிறுவனங்களை ஒடுக்கி வருகிறது மத்திய பாஜக அரசு. ஆக்ஸ்பாம் உள்ளிட்ட 6,000-க்கும் அதிகமான தன்னார்வ நிறுவனங்களின் உரிமங்களை இந்திய அரசு இந்த பிரிவின் கீழ் புதுப்பிக்காமல் இருந்து வருகிறது.

இந்தியாவுக்கு அறிவுரை
மதமாற்ற தடுப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கர்நாடகத்தில் மதமாற்ற தடுப்பு நடவடிக்கைகளின் பெயரால் கிறிஸ்தவ தேவாலயங்கள் அனைத்திலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மதமாற்றத்தில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்திருந்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதசுதந்திர பாதுகாப்பு தொடர்பாக இந்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளையும் அந்த ஆணையம் வெளியிட்டுள்ளது.
-
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை!












Click it and Unblock the Notifications