இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்.. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு
டெல்லி: இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகானை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் மரணமடைந்த நிலையில் அவரது இடத்துக்கு லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் ராணுவம், விமானப்படை, கப்பற்படைக்கு தனித்தனியே தளபதிகள் உள்ளனர். இந்நிலையில் முப்படைகளையும் இணைத்து ராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் முப்படை தலைமை தளபதி பொறுப்பு உருவாக்கப்பட்டது.
இந்த பொறுப்பில் முதன் முதலாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டார். இவர் 2019 டிசம்பர் 31 முதல் மூன்றாண்டுகள் வரை தொடர்ந்து பணி செய்து வந்தார்.

பிபின் ராவத் மரணம்
இந்நிலையில் தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ல் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் இறந்தார். இதையடுத்து இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பதவி காலியாக இருந்தது. இருப்பினும் அந்த பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்பது பற்றி மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வந்தது.

அனில் சவுகான் நியமனம்
அந்த வகையில் தற்போது முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் தலைமை தளபதி அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவர் மத்திய அரசின் ராணுவ விவகாரத் துறை செயலாளராகவும் பணியாற்றுவார் என பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2வது நபராக நியமனம்
இந்த பொறுப்பில் உள்ளவர் முப்படைகளை ஒருங்கிணைத்து செயல்படுவார். நாட்டின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு இவருக்கு உள்ளது. இதனால் தான் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகும். இந்தியாவில் முதன் முதலாக பிபின் ராவத் முப்படைகளில் தலைமை தளபதியாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு 2வது நபராக அனில் சவுகான் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விதிகளில் திருத்தம்
முன்னதாக முப்படை தலைமை தளபதி நியமனத்துக்கான விதியில் சமீபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 62 வயது நிரம்பிய ஓய்வு அல்லது பணியில் உள்ள லெப்டினென்ட் ஜெனரல், ஏர் மார்ஷல், துணை அட்மிரல்கள் மட்டுமே முப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்க தகுதி உடையவர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 3 ஸ்டார், 4 ஸ்டார் கொண்ட அதிகாரிகளும் தகுதி படைத்தவர்களாக உள்ளனர். இதில் லெப்டினென்ட் ஜெனராலாக கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற அனில் சவுகான் தற்போது முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications