லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை கவலைக்கிடம்- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: பீகார் முன்னாள் முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை மோசமடைந்துள்ளதால் டெல்லிக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வட இந்தியாவில் சமூக நீதிக்கான குரல்களில் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குடன் இணைந்து பணியாற்றியவர் லாலு பிரசாத் யாதவ். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சிறைதண்டனை அனுபவித்து வந்தார்.

இந்த நிலையில் லாலுவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனையில் லாலு அனுமதிக்கப்பட்டார். லாலுவுக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. ஆனால் நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதியானது.
#UPDATE | Ailing RJD leader Lalu Prasad has been bought to Delhi from Ranchi, Jharkhand by air ambulance; visual from outside the Delhi airport.
— ANI (@ANI) January 23, 2021
Referred from RIMS, Ranchi on the advice of State Medical Board, he will be admitted to AIIMS, Delhi. https://t.co/IsFcHT5czQ pic.twitter.com/kkMcQyyMvR
இதனையடுத்து லாலுவின் குடும்பத்தினர் ராஞ்சி சென்று அவரை சந்தித்தனர். இந்த நிலையில் ரிம்ஸ் மருத்துவமனையின் பரிந்துரையின் லாலு பிரசாத் யாதவ் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமது தந்தையின் உடல்நிலை கவலைக்குரியதாக இருப்பதாக லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications