உக்ரைன் போர் எதிரொலி! 2022 கத்தார் கால்பந்து உலகக் கோப்பையில் இருந்து ரஷ்யா நீக்கம்! FIFA அதிரடி
டெல்லி: உக்ரைன் போர் தொடரும் நிலையில், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த வியாழக்கிழமை ரஷ்யா ராணுவம் போரை ஆரம்பித்தது. ரஷ்ய அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த முழு வீச்சிலான ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது.
முதலில் வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்ய ராணுவம், அதன் பின்னர் தரைவழி தாக்குதலையும் தொடங்கியது. தலைநகர் கீவ் தொடங்கிப் பல நகரங்களில் போர் நடைபெற்றது.

உக்ரைன் போர்
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை உலகின் பல்வேறு நாடுகளையும் ஆத்திரப்படுத்தியது. ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி உலகின் பல்வேறு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவும் பிரிட்டனும் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் அதிபர் புதின் சொத்துகளை முடக்க ஒப்புதல் அளித்தது.

ரஷ்யா நீக்கம்
அரசியல் ரீதியாக மட்டுமின்றி, விளையாட்டுத் துறையிலும் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை விளையாட்டு அமைப்புகள் எடுத்து வருகின்றன. ஏற்கனவே ரஷ்யாவில் நடைபெற இருந்த ஃபார்முலா ஒன் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டன. இதனிடையே 2022 கால்பந்து உலகக் கோப்பையில் இருந்து ரஷ்யா நீக்கப்படுவதாகச் சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிபா அறிவித்துள்ளது.

2022 கத்தார் உலகக் கோப்பை
மேலும், ரஷ்ய அணிகள் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து சர்வதேச கால்பந்து தொடர்களில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஃபிபா தற்போது அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை தகுதிச் சுற்று பிளே-ஆஃப்களில் ரஷ்ய ஆண்கள் அணி விளையாட இருந்தது, அதேபோல ரஷ்யப் பெண்கள் அணியும் இங்கிலாந்தில் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கிளப் அணிகள்
ஃபிபா அமைப்பின் இந்த அறிவிப்பு ஐரோப்பியப் போட்டிகளில் பங்கேற்கும் ரஷ்ய கிளப்புகளையும் பாதிக்கும். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் "தேசிய அணிகள் அல்லது கிளப் அணிகள் என அனைத்து ரஷ்ய அணிகளும், மறு அறிவிப்பு வரும் வரை FIFA மற்றும் UEFA போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறது. உக்ரைனில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் ஆதரவாக உள்ளோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications