Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்ரோ எட்டப்போகும் உச்சம்.. ரஷ்யா கொடுக்கும் மிகப்பெரிய கிஃப்ட்! புதின் அசத்திட்டாரே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரஷ்ய அதிபர் புதின் டெல்லிக்கு வந்திருக்கிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு புதின் இந்தியா வந்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த சந்திப்பை ஒட்டி, இந்தியாவுக்கு RD-191M செமி-கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினுக்கான முழுமையான தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு, ரஷ்யா ஒப்புதல் அளித்திருக்கிறது. இது நாசாவின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் விண்வெளி துறையில் இந்தியா புதிய உச்சத்தை எட்டும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா விரைவில், ககன்யான் திட்டம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது. இந்த திட்டத்திற்கு RD-191M செமி-கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் பெரிய அளவில் உதவும்.

Russia ISRO space

ரஷ்ய என்ஜின் ஏன் அவசியம்?

இஸ்ரோ பயன்படுத்தும் LVM3 ராக்கெட்டுகளில் மூன்று நிலைகள் இருக்கும். முதல் நிலையானது, S200 என்ஜின்களை கொண்டிருக்கும். இந்த ராக்கெட் பூமியின் ஈர்ப்பு விசையை கிழித்துக்கொண்டு ராக்கெட்டை உயரத்தில் எழுப்ப பயன்படுகிறது. இந்த என்ஜின் 2 நிமிடங்களில் ராக்கெட்டை 120 கி.மீ உயரத்திற்கு கொண்டு சென்றுவிடும். ஆனால் அதன் பின்னர்தான் சவால் இருக்கிறது. அதாவது, 2 நிமிடங்களுக்கு பிறகு எரிபொருள் முழுவதும் தீர்ந்து போய் S200 என்ஜின் கழன்று கடலில் விழுந்து விடும். ராக்கெட் இன்னும் உயரமாக செல்ல வேண்டும் என்பதால் இரண்டாம் கட்ட என்ஜின் அந்த வேலையை செய்யும்.

இஸ்ரோவின் திட்டம்

L110 என்கிற என்ஜினைதான் இரண்டாம் கட்டத்திற்கு இஸ்ரோ பயன்படுத்தி வருகிறது. இந்த என்ஜின் 150-160 டன் வரை எடையை உந்தி தள்ளும். இதன் வேகம் சீரானதாக இருக்கும். வேகத்தை குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியாது. அதைவிட முக்கியம் இந்த என்ஜினை மீண்டும் பயன்படுத்த முடியாது என்பதுதான். செயல்திறனும் குறைவாக இருக்கும். தற்போது RD-191M செமி-கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினுக்கான முழுமையான தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு, ரஷ்யா ஒப்புதல் அளித்திருப்பதால், L110க்கு மாற்றாக RD-191M என்ஜினை பயன்படுத்தப்பட இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.

நம்பிக்கையான என்ஜின்

இந்த என்ஜினை கொண்டு 200-220 டன் வரை எடையை உந்தி தள்ள முடியும். அதேபோல நடு வழியில் இதன் வேகத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியும். மட்டுமல்லாது என்ஜினை மீண்டும் பயன்படுத்த முடியும். இந்த என்ஜினில் எரிபொருளாக சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மற்ற எரிபொருளை விட மண்ணெண்ணெய்யின் விலை குறைவு என்பதால், இந்த என்ஜினை குறைந்த செலவில் இயக்க முடியும். ரஷ்யா தவிர அமெரிக்கா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் இந்த என்ஜினை பயன்படுத்துகின்றன.

ககன்யான் மிஷன்

தற்போது வரை செமி கிரையோஜெனிக் என்ஜின்களை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் உருவாக்கி வருகின்றன. தற்போது இந்தியாவுக்கு இந்த என்ஜின் தொழில்நுட்பத்தை வழங்க ரஷ்யா முன்வந்திருப்பதால், விரைவில் மேற்குறிப்பிட்ட பட்டியலில் இந்தியாவும் இணையும். அதாவது இந்தியாவில் RD-191M செமி-கிரையோஜெனிக் என்ஜினை இஸ்ரோ தயாரிக்கும். இந்த என்ஜின் ககன்யான் மிஷனில் இந்தியாவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் மனிதர்கள் விண்வெளிக்கு செல்லும்போது கூடுதலான பொருட்கள் எடுத்து செல்ல வேண்டி இருக்கும். இதனால் எடையும் அதிகரிக்கும். எனவே ராக்கெட்டை உந்தி தள்ள RD-191M என்ஜின் பயன்படும் என்று கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+