சித்தார்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும்.. ஆனால்.. ஆபாச ட்வீட்டிக்கு சாய்னா பதிலடி!
டெல்லி: தன் மீது சித்தார்த் வெளியிட்ட ஆபாசமான கருத்துக்கு பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மவுனம் கலைத்து பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video

சித்தார்த் அண்மைகாலமாக மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகியின் கன்னத்தில் பளார் விட வேண்டும் என தொடங்கி நிறைய சர்ச்சைக்குரிய கருத்துகளை சித்தார்த் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் சில தவறுகளை சுட்டிக் காட்டி சித்தார்த்துக்கு டேக் செய்து நறுக்கென நெட்டிசன்கள் கேள்வி எழுப்புவதும் உண்டு. அந்த வகையில் பஞ்சாபில் விவசாயிகளால் பிரதமர் நரேந்திர மோடி 20 நிமிடங்கள் காக்க வைத்த சம்பவத்தை ஆன்டி பாஜக கொண்டாடி வருகிறார்கள்.

பிரதமர பாதுகாப்பில் குளறுபடி
அதே வேளையில் கட்சிக்கு அப்பாற்பட்டு அவர் ஒரு நாட்டின் பிரதமர் என்ற வகையில் பஞ்சாப்பில் நடந்த சம்பவத்திற்கு கண்டனமும் எழுப்புகிறார்கள். இதுகுறித்து பாட்மிண்டன் வீரர் சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் பிரதமரின் பாதுகாப்பிலேயே சமரசம் செய்யப்பட்டால் இந்த நாட்டில் யாரும் பாதுகாப்பாக இருப்பதாக சொல்ல முடியாது.

மகளிர் ஆணையம்
பிரதமர் நரேந்திர மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை கண்டிக்கிறேன் என பதிவிட்டிருந்தார். இதற்கு நடிகர் சித்தார்த் பாலியல் ரீதியான சர்ச்சைக்குரிய கருத்தை ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டுக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன. இதில் மகளிர் ஆணையம் நேரடியாக தலையிட்டு வழக்குப் பதிவு செய்துள்ளது.

சாய்னா நேவால்
இதையடுத்து சித்தார்த் தனது கருத்துக்கு விளக்கமளித்துள்ளார். அதில் அவர் தவறான உள்நோக்கத்துடன் நான் அந்த கருத்தை சொல்லவிலலை. எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆங்கில செய்தி சேனலுக்கு சாய்னா நேவால் ஒரு பேட்டி அளித்துள்ளார்.

பிரதமர் பாதுகாப்பு
அதில் அவர் கூறுகையில் அவர் எதை பற்றி பேசினார் என எனக்கு புரியவில்லை. எனக்கு நடிகராக அவரை மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் அப்படி செய்திருக்கக் கூடாது. நல்ல வார்த்தைகளால் சிறப்பான வார்த்தைகளால் அவரது கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். நாட்டில் ஒரு பிரதமருக்கே பாதுகாப்பில்லை என்றால் பின்னர் நாட்டில் யாருக்குத்தான் பாதுகாப்பு இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications