பிரதமர் மோடி முன்னாடி.. சாம் ஆல்ட்மென் செய்த செயல்! மொத்த டெக் உலகமும் ஷாக்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற டெல்லி ஏஐ மாநாட்டில் ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட் மேன் செய்த செயல் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகின்றன.
'இந்தியா AI இம்பாக்ட் சமிட் 2026' எனும் தலைப்பில் ஏஐ மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு தொடர்பான செய்திகள் சமீபத்தில் சோஷியல் மீடீயாக்களில் பரவலாக ஷேராக வருகிறது.

இப்படி இருக்கையில், இந்த மாநாட்டில் ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் செய்த செயல் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாநாட்டில் சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் டேரியோ அமோடி உள்ளிட்ட பல டெக் ஜாம்பவான்கள் பங்கேற்றிருந்தனர். இவர்களுடன் பிரதமர் மோடி பாரத் மண்டபத்தில் ஒன்றாக சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்வின்போது அனைவரும் கைகோர்த்து, கைகளை உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். ஆனால், டேரியோ அமோடி மற்றும் சாம் ஆல்ட்மேன் குலுக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மோடியும் மேடையில் இருந்த அந்நேரம், இருவரும் இப்படி கை குலுக்காமல் இருந்தது, ஏஐ உலகில் இவர்கள் இருவருக்கம் இடையே நீடித்து வரும் நீண்டகாலமாக பஞ்சாயத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
மேடையில் அருகருகே நின்று கொண்டிருந்த இருவரும் சற்றே சங்கடமாகத் தெரிந்தனர். பிரதமர் மற்றும் பிற தலைவர்களின் வேண்டுகோளையும் மீறி, அவர்கள் கை கோர்க்கத் தயங்கினர். ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, தங்கள் முஷ்டிகளை உயர்த்தி சங்கிலியை உடைப்பது போலச் செயல்பட்டனர். இத்தருணம் கேமராவில் பதிவாகி பெரும் கவனத்தைப் பெற்றது.
இக்காட்சி, AI உலகில் இந்தியா முக்கியப் பங்காற்ற பிரதமர் மோடி முயற்சிக்கும் நிலையில், அதன் யதார்த்தங்கள் எவ்வளவு சிக்கலானவை என்பதை உணர்த்தியது. ஆல்ட்மேன்-அமோடி கை குலுக்க மறுத்தது, AI உலகம் ஆழமாகப் பிளவுபட்டுள்ளதையே தெளிவாகப் பிரதிபலித்தது.
இவர் இருவரும் கைகோர்க்க மறுத்ததற்கு காரணம் இருக்கிறது. ஆரம்பத்தில் டேரியோ ஓபன்ஏஐ நிறுவனத்தில் துணை தலைவராக வேலை செய்து வந்தார். அப்போது இவருக்கு மேலதிகாரியாக சாம் ஆல்ட்மேன் இருந்தார். இப்படி பணியாற்றியபோது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. சாம் ஆல்ட்மேன் ஓபன்ஏஐ நிறுவனத்தை வணிகரீதியாகவும் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்காமலும் வளர்த்து வருகிறார் என டேரியோ குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதனையடுத்து இருவருக்கும் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, ஓபன் ஏஐ நிறுவனத்திலிருந்து டேரியோ பிரிந்து வந்து ஆந்த்ரோபிக் நிறுவனத்தை தொடங்கினார். டெக் உலகில் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இப்படி இருக்கையில்தான் இருவரும் கைகோர்க்க மறுத்துள்ளனர்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications