இங்க ஏன் வந்தீங்க.. ஹைகோர்ட் போங்க.. சவுக்கு சங்கருக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்
டெல்லி: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் புழல் இன்ஸ்பெக்டர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இந்த நிலையில் தன் மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை ஹைகோர்ட் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர். இவர் அரசியல் சார்ந்த கருத்துக்களை யூடியூபில் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் தமிழக அரசு மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இதன் பின்னர் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி மோசடி வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

சவுக்கு சங்கர் கைது
சென்னை ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளின் அடிப்படியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்டு இருந்தார். பின்னர் தனது தாயார் தொடர்ந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ காரணங்கள் கருதி இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீனில் வெளி வந்த பிறகும் சவுக்கு சங்கர் தொடர்ந்து யூடியூப்பில் வீடியோக்களை பதிவிட்டபடியே இருந்தார்.
இதனால் சவுக்கு சங்கர் ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக தெரியவந்தால் அவரை கைது செய்யலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. விட்டது. இதற்கிடையே தான் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி சவுக்கு சங்கர் தாயார் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
குண்டர் சட்டம் பாய்ந்தது
மருத்துவ சிகிச்சை மற்றும் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்ததாலும், அவரது இடைக்கால ஜாமீன் மனு முடிவதாலும், அவர் சரண் அடைய வேண்டும். இல்லையென்றால் அவர் மீது போலீசார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் சவுக்கு சங்கர் தலைமறைவானார். இதையடுத்து ஆந்திராவில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
இதன்பிறகு சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தான் சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் புழல் இன்ஸ்பெக்டர் வசந்தராஜா, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தார். இதனால் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து, அவரது சகோதரியின் மகன் பரத் என்பவர் சார்பில் வழக்கறிஞர் கே. சிவா ஆட்கொணர்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
இந்த ரிட் மனுவினை உச்ச நீதிமன்ற நீதிபதிகல், தீபாங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விவிசாரணை செய்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் ஆஜரானார். தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா ஆஜராயினர். ரிட் மனுவை பரிசீலித்த நீதிபதிகள், "சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகலாம் என்று அறிவுறுத்தினர். மேலும் மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து, தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications