டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவுக்கு எண்ட் கார்ட் தான்.. 4வது அலைக்கு வாய்ப்பே இல்லை.. அடித்துச் சொல்லும் மருத்துவ நிபுணர்.!

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவில் கொரோனா 3வது அலை பரவல் முடிவுக்கு வந்துவிட்டதை உறுதியுடன் கூறலாம் எனவும், கொரோனா 4வது அலை ஏற்பட வாய்ப்பு இல்லை என்று மூத்த மருத்துவ நிபுணரான டி ஜேக்கப் ஜான் கூறியுள்ளார்.

சீனாவின் வூகான் மாகணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் அலையாக பரவிபெரும் அச்சுறுத்தல் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பின்னர்

6 முதல் 9 வரை மாணவர்களுக்கு தேர்வு எப்போது.. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முக்கிய அறிவிப்பு6 முதல் 9 வரை மாணவர்களுக்கு தேர்வு எப்போது.. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முக்கிய அறிவிப்பு

கடந்த 2021 ஆம் ஆண்டு இரண்டாவது அலை அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளை ஏற்படுத்தியது, கொரோனா டெல்டா வகையால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இந்நிலையில் தற்போது இந்தியாவில் மூன்றாவது அலை குறைந்து வரும் நிலையில், நான்காவது அலை இந்தியாவில் ஜூன் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24 வரை தொடரும் என்று ஆராய்ச்சியாளர்கள் இப்போது கணித்துள்ளனர். கொரோனா நான்காவது அலை குறைந்தது நான்கு மாதங்கள் நீடிக்கும் என்று ஐஐடி கான்பூரின் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

கான்பூர் ஐஐடி

கான்பூர் ஐஐடி

ஐஐடி கான்பூரின் கணிதம் மற்றும் புள்ளியியல் துறையின் சபரா பர்ஷத் ராஜேஷ்பாய், சுப்ரா சங்கர் தர் மற்றும் ஷலப் ஆகியோர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.இந்தியாவில் கொரோனாவின் நான்காவது அலை ஜூன் 22 முதல் தொடங்கி, ஆகஸ்ட் 23 அன்று அதன் உச்சத்தை அடைந்து அக்டோபர் 24 இல் முடிவடைகிறது," என்று அவர்கள் தெரிவித்தனர். கொரோனாவின் நான்காவது அலையின் உச்சத்தின் இடைவெளியைக் கணக்கிடுவதற்கு "பூட்ஸ்ட்ராப்" எனப்படும் ஒரு முறையைக் குழு பயன்படுத்தியது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருவேறு கருத்துகள்

இருவேறு கருத்துகள்

கான்பூர் ஐஐடியின் கருத்துக்கு பலர் ஆதரவும் ஒரு தரப்பினர் மறுப்பும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் கடந்த காலங்களில் அவர்களின் கணிப்பு பலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் நாட்டில் அதிகப்படியான மக்கள் தடுப்பூசி செலுத்தியிருக்கும் நிலை இயற்கையாக பாதுகாப்பு இருப்பதாகவும், கொரோனா 4வது அலை வந்தாலும் பாதிப்பு குறைவாகவும், பலி எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா 4வது அலை ஏற்பட வாய்ப்பு இல்லை என்று மூத்த மருத்துவ நிபுணரான டி ஜேக்கப் ஜான் தெரிவித்துள்ளார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவரான ஜேக்கப் ஜான் இது பற்றி கூறுகையில், இந்தியாவில் கொரோனா 3-வது அலை பரவல் முடிவுக்கு வந்துவிட்டதை உறுதியுடன் கூறலாம். நாட்டில் கொரோனா மீண்டும் எண்டமிக் கட்டத்தை மீண்டும் எட்டிவிட்டது. எதிர்பாரத வகையில் உருமாறி பரவாத வரையில், இந்தியாவில் கொரோனா 4-வது அலை ஏற்படாது என்பதை உறுதியாக நம்பலாம்" என்றார்.

English summary
Senior medical expert D Jacob John said that it is safe to say that corona 3rd wave spread in India has come to an end and corona 4th wave is unlikely to occur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X