டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வரும் 26-இல் அபூர்வ சூரிய கிரகணம்.. இப்ப மிஸ் செய்தீங்கன்னா.. அதோட 2031-இல்தான்! பாத்துக்கோங்க!

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அபூர்வ சூரிய கிரகணத்தை முழுமையாக பார்க்க முடியும். வரும் 26-ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்கிறது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும் போது அதன் நிழலால் சூரியனின் ஒரு பகுதி மறைக்கப்படும். இதுவே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இதுவே சூரியனை நிலவு முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம்.

சூரியனின் மையப்பகுதியை மட்டும் நிலவு மறைத்து விளிம்பில் வளையம் போல் ஒளி தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் ஆகும். இது ஒரு அபூர்வ நிகழ்வாகும். இந்த வளைய சூரிய கிரகணம் வரும் 26-ஆம் தேதி நிகழ்கிறது.

அதிமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் எந்த நலத்திட்டமும் இல்லை -சாத்தூர் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு அதிமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் எந்த நலத்திட்டமும் இல்லை -சாத்தூர் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

கர்நாடகம்

கர்நாடகம்

இந்தியாவில் தமிழகத்திலும் கர்நாடக மாநிலத்தின் தென் பகுதி, கேரளாவின் வடபகுதியில் இந்த கிரகணத்தை காணலாம். கர்நாடகம், கேரளத்தை விட தமிழகத்தில்தான் சூரிய கிரகணம் நன்றாக தெரியும்.

முழுமையாக தெரியும்

முழுமையாக தெரியும்

வரும் 26-ஆம் தேதி காலை 8 மணி முதல் 11.16 மணி வரை இதை பார்க்கலாம். தமிழகத்தில் கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் இந்த சூரிய கிரகணம் முழுமையாக தெரியும்.

கிரகணம்

கிரகணம்

இதை பார்வையிட தமிழகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. அதற்கென்று இருக்கும் கண்ணாடி வழியாக பார்க்க வேண்டும். மேற்கண்ட 10 மாவட்டங்கள் அல்லாது சென்னையிலும் கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2031-இல் மீண்டும் கிரகணம்

2031-இல் மீண்டும் கிரகணம்

சூரிய கிரகணம் வரும் போது வெளியே செல்லலாம், சாப்பிடலாம். கர்ப்பிணிகள் வழக்கம் போல் தங்கள் பணிகளை செய்யலாம். இந்த கிரகணம் அடுத்த ஆண்டு பஞ்சாப், ஹரியானாவில் தெரியும். அது போல் 2031-ஆம் ஆண்டு தமிழகத்தின் மதுரை, தேனியில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

English summary
10 districts in Tamilnadu witness annular solar eclipse on December 26.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X