டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசு என்னதான் செய்யுது.. நாளைக்கு ஆலோசிப்போம்.. 18 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு.. திமுக பங்கேற்பு

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 18 எதிர்க்கட்சிகளுடன் ஒரு மெகா எதிர்க்கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க காங்கிரஸ் சார்பில் நாளை, வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற உள்ள இந்த வீடியோ கான்பரன்ஸ் வடிவிலான ஆலோசனையில், திமுக பங்கேற்க உள்ளது.

Sonia Gandhi invites mega opposition meet

கொரோனா வைரஸ் தொற்றுநோயை அரசு கையாளும் விதம், புலம்பெயர்ந்தோர் பிரச்சினை மற்றும் தொழிலாளர் சட்டங்களை மாநிலங்கள் நிறுத்துவது போன்றவை இந்த நிகழ்ச்சி நிரலில் அடங்கும்

இந்த கூட்டத்தில், அரசின் பொருளாதார தொகுப்பு மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான பிற நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்குவார். இதற்காக அழைக்கப்பட்டுள்ள 18 கட்சிகளில்,
திமுக, இடதுசாரி கட்சிகள், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை ஏற்கனவே அழைப்பை ஏற்றுக்கொண்டன என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மத்திய அரசு நிதி கொடுக்காத போது... மாநிலங்களில் கொரோனா ஒழிப்பு சாத்தியமா..? -வேல்முருகன்மத்திய அரசு நிதி கொடுக்காத போது... மாநிலங்களில் கொரோனா ஒழிப்பு சாத்தியமா..? -வேல்முருகன்

"நான் இதில் கலந்துகொள்வேன், இது ஒரு நல்ல விஷயம், நிலைமை பற்றி விவாதிப்போம்" என்று, கொல்கத்தாவில், மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். காங்கிரஸின் முன்முயற்சியை மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும் ஆன்லைன் அமர்வில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Congress chief Sonia Gandhi will chair the meet, for which 18 parties have been invited. MK Stalin's DMK, the Left parties, and Mamata Banerjee's Trinamool Congress have already accepted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X