மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி வெளிநாடு பயணம்..ராகுல், பிரியங்கா உடன் பயணம்
டெல்லி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார். அவர் இந்தியா திரும்பும் முன் உடல் நலம் சரியில்லாத அவரது தாயாரை சந்தித்துவிட்டு வருவார் எனவும் தெரிவித்தார். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் உடன் பயணிக்கவுள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். அவருக்கு உடல்நிலை அவ்வப்போது சரியில்லாமல் போவதால் கட்சி பணிகளில் தீவிரம் காட்ட முடியவில்லை.
இதனால், கட்சியை பலப்படுத்தும் பணியில் காங்கிரஸ் இறங்கி உள்ளது. சோனியா காந்தி, மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாக அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதயாத்திரை
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்பு காங்கிரசை வலுப்படுத்தவும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றவும் நாடு முழுவதும் மிகப்பெரிய யாத்திரையை காங்கிரஸ் நடத்துகிறது. கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பாதயாத்திரை செல்கிறார். வருகிற 7ஆம் தேதி இந்த யாத்திரையை அவர் தொடங்குகிறார்.

வெளிநாடு பயணம்
அதற்கு முன்னதாக அடுத்த மாதம் 4ந் தேதி டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்று ராகுல் உரையாற்றுகிறார். இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி வெளிநாடு பயணம் மேற் கொள்ள உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ராகுல், பிரியங்கா பயணம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனியாகாந்தியுடன் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வெளிநாடு செல்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் எந்த தேதியில் பயணம் மேற்கொள்கின்றனர்.

தாயாரை சந்திக்கும் சோனியா
எந்த நாடுகளுக்கு அவர்கள் செல்கின்றனர் என்ற விபரங்கள் அந்த அறிக்கையில் இடம் பெறவில்லை. தமது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பும் முன்பு, உடல் நிலை சரியில்லாத தனது தாயாரை சோனியாகாந்தி சந்திப்பார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications