டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி? பாத யாத்திரைக்கு முன் முக்கிய முடிவு!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா முழுவதும் பாத யாத்திரை மேற்கொள்வதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    சேர்ந்தே இருப்பது.. காங்கிரஸும் கோஷ்டி மோதலும்! கைகலப்பால் கலவரக் காடான ஆபிஸ் - வீடியோ

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த 2017ம் ஆண்டு பொறுப்பேற்ற ராகுல் காந்தி, 2019ம் ஆண்டு மக்களவை தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 21ல் இருந்து செப்டம்பர் 30க்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அக்கட்சி அறிவித்திருந்தது.

    தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுவானது மதுசூதன் மிஸ்ட்ரி தலைமையில் தேர்தல் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்போது தேர்தல் தேதியை அறிவித்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுப்போம் என்று தேர்தல் குழு தெரிவித்துள்ளது.

    அது என்ன 9 வகை தானியங்கள்? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய பரிசின் முக்கியத்துவம் இதுதான் அது என்ன 9 வகை தானியங்கள்? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய பரிசின் முக்கியத்துவம் இதுதான்

    காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல்

    காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல்

    நாடு முழுவதும் மாநில காங்கிரஸ் கமிட்டியில் இருந்து 9000 பேர் வாக்களிக்க தகுதியானவர்களாக அறியப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலோடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே ராகுல் காந்தியின் பாத யாத்திரை தொடங்க உள்ளது. இதனால் அகில இந்திய அளவிலான நிர்வாகிகள் தேர்தல் மற்றும் அகில இந்திய தலைவர் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது.

    மீண்டும் ராகுல்?

    மீண்டும் ராகுல்?

    ஆனால் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி மீண்டும் ஏற்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் ராகுல் காந்தி இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை என்று தெரிய வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் பாத யாத்திரை மேற்கொள்ள உள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராக இருந்து யாத்திரை சென்றால் கட்சியினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எழுச்சி ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    பாத யாத்திரை

    பாத யாத்திரை

    ஏனென்றால் 2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட பிரச்சாரமாகவே ராகுல் காந்தியின் பாத யாத்திரை பார்க்கப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 12 மாநிலங்களில் 3 ஆயிரத்து 500 கி.மீ பாத யாத்திரை நடைபெறுகிறது. ராகுல் காந்தியின் முன்னெடுப்பால் காங்கிரஸ் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    காங்கிரஸ் மேலிடம் முடிவு?

    காங்கிரஸ் மேலிடம் முடிவு?

    இதனால் பாத யாத்திரை தொடங்குவதற்கு முன் செப். 5ம் தேதி அவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அறிவிக்கவும், பாத யாத்திரை நிறைவடைந்த பிறகு முறைப்படியாக தேர்வு செய்யவும் டெல்லி மேலிடம் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    English summary
    Top election body of the Congress has recommended that nominations for the party presidential election be completed by August 28. But Sonia Gandhi is yet to act as Rahul has not agreed to contest the polls.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X