அடுத்து காங்கிரஸ் தலைவர்தான்.. இந்திய இளைஞர் காங்கிரசிற்கு புதிய இடைக்கால தலைவர் நியமனம்!
இந்திய இளைஞர் காங்கிரசின் இடைக்கால தலைவராக காங்கிரஸ் உறுப்பினர் பி.வி.ஸ்ரீனிவாஸ் நியமன செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: இந்திய இளைஞர் காங்கிரசின் இடைக்கால தலைவராக காங்கிரஸ் உறுப்பினர் பி.வி.ஸ்ரீனிவாஸ் நியமன செய்யப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின் காங்கிரஸ் கட்சிக்குள் நிறைய மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பலர் பாஜகவிற்கு தாவிக்கொண்டு இருக்கிறார்கள். முக்கிய சில உறுப்பினர்கள் மேலும் கட்சியை விட்டு எப்போது வேண்டுமானாலும் வெளியேற வாய்ப்புள்ளது என்று செய்திகள் வருகிறது.

லோக்சபா தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வந்த இரண்டே நாட்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். லோக்சபா தேர்தல் தோல்வியில் இருந்து அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிர்ச்சியில் இருந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பதவி விலகல் கடிதம் மேலும் அதிர்ச்சியை அளித்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமாவில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில்தான் தற்போது இந்திய இளைஞர் காங்கிரசின் இடைக்கால தலைவராக காங்கிரஸ் உறுப்பினர் பி.வி.ஸ்ரீனிவாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் காங்கிரசின் துணை தலைவராக பி.வி ஸ்ரீனிவாஸ் இருந்து வந்தார்.
Srinivas BV has been appointed interim president of Indian Youth Congress. pic.twitter.com/MZxQiBpKWL
— ANI (@ANI) July 29, 2019
தற்போது அவர் அதன் தலைவராக்கப்பட்டு இருக்கிறார். இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு தேசிய தலைவர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்று கூறுகிறார்கள். வரும் ஜூலை 31ம் தேதி இது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் தலைமையில் இந்த கூட்டம் நடக்க உள்ளது. இதில் அனைத்து மாநில தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications