40 நாடுகளில் பரவும் புதிய stealth Omicron! இந்த உருமாறிய கொரோனா ஆபத்தானதா? வேகமாக பரவுமா? பரபர தகவல்
டெல்லி: உலகையே தற்போது அச்சுறுத்தி வரும் ஓமிக்ரான் கொரோனாவில் இருந்து தற்போது புதிய வேரியண்ட் (sub-variant) தோன்றியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஓமிக்ரான் கொரோனா முதலில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவரை கொரோனா பாதிப்பு உலக நாடுகளிடையே குறைந்து வந்த நிலையில், அதன் பின் மீண்டும் உயரத் தொடங்கியது.
அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது.

புதிய வேரியண்ட்
இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்தச் சூழலில் பிரிட்டன் நாட்டில் ஓமிக்ரான் கொரோனாவில் இருந்து தற்போது புதிய வேரியண்ட் (sub-variant) தோன்றியுள்ளதாகவும் இது தொடர்பாக அந்நாட்டு ஆய்வாளர்கள் தீவிர ஆய்வில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. BA.2 அல்லது stealth Omicron எனப்படும் இந்த உருமாறிய கொரோனாவில் உள்ள மாறுபாடுகள் ஓமிக்ரானை போல இல்லை என்பதால் டெல்டாவில் இருந்து இதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன், இந்தியா
இருப்பினும், இதுவரை இந்த BA.2 ஓமிக்ரான் வேரியண்டை ஆய்வாளர்கள் கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிடவில்லை. பிரிட்டன் நாட்டில் மட்டும் சுமார் 426 பேருக்கு இந்த புதிய வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, டென்மார்க், சுவீடன், சிங்கப்பூர் நாடுகளிலும் இந்த புதிய வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கூட சிலருக்கு இந்த புதிய வேரியண்ட் உறுதி செய்யப்பட்டுள்ளது.

40 நாடுகள்
குறிப்பாக டென்மார்க் நாட்டில் தற்போது உறுதி செய்யப்படுவோரில் சுமார் 45% பேருக்கு இந்த வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளதாகவும் டென்மார்க் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சுமார் 40 நாடுகளில் இந்த புதிய வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தானதா
கொரோனா என்று இல்லை அனைத்து வகையான வைரஸ்களும் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும் என்று தெரிவித்துள்ள மருத்துவர் மீரா சந்த், இது வழக்கமான ஒன்று தான் என்றும் புதிய வேரியண்ட்கள் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்த புதிய வேரியண்ட் எப்படித் தோன்றியது என்பது குழப்பமாக இருந்தாலும் கூட இதனால் ஆபத்து எதுவும் இல்லை என டென்மார்க் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வேகமாகப் பரவுமா
இந்த stealth ஓமிக்ரான் நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து இன்னும் அதிகமாகத் தப்பும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம் என்றும் இதன் மூலம் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கலாம் என்றும் ஆய்வார்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இதை உறுதியாகச் சொல்ல முடியாது எனத் தெரிவித்த ஆய்வாளர்கள், இது குறித்து அடுத்தகட்ட ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications