பெற்றோரின் சம்பளத்தை வைத்து ஓபிசி கிரிமி லேயரை தீர்மானிக்க முடியாது.. உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரிமி லேயர் அந்தஸ்தை தீர்மானிக்க, பெற்றோரின் சம்பளம் அல்லது வருமானத்தை மட்டுமே ஒரே அளவுகோலாகக் கொள்ள முடியாது என்ற தனது முந்தைய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஓபிசி தேர்வர்களின் இட ஒதுக்கீட்டு உரிமை தொடர்பான இந்த விவகாரத்தில், மத்திய அரசின் விளக்கக் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்தியாவில் இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு கிரிமி லேயர் என்ற வருமான வரம்பு இருக்கிறது. அதாவது ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக சம்பாதிக்கும் ஓபிசி பிரிவினர் மட்டுமே இட ஒதுக்கீடு உரிமையை பெற முடியும். இட ஒதுக்கீடு மூலம் அனைத்து தரப்பினரும் பலன் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த உச்ச வரம்பு கொண்டு வரப்பட்டது.

Supreme Court on OBC Creamy Layer Supreme Court OBC

கிரிமி லேயர்

இதற்கிடையே கிரிமி லேயர் தொடர்பாக கடந்த மார்ச் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதில் கூடுதல் விளக்கங்களையும் உத்தரவுகளையும் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது முந்தைய தீர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் 8 வாரங்களுக்கு நீட்டித்துள்ளது.

ஓபிசி இடஒதுக்கீட்டில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவினரை கிரிமி லேயர் என வகைப்படுத்தி, அவர்களுக்கு இடஒதுக்கீட்டு பலன் வழங்கப்படுவதில்லை. இதற்கான அளவுகோல்களை நிர்ணயிப்பதில் பெற்றோரின் வருமானம் தொடர்பான விதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மத்திய அரசு

1993ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய அரசின் குறிப்பாணையிண்படி, சம்பளம் மற்றும் விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானம், கிரிமி லேயர் நிலையை தீர்மானிக்கும் மதிப்பீட்டில் சேர்க்கப்படாது. ஆனால், 2004ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட விளக்க கடிதத்தில்.. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தையும் ஒரு அளவுகோலாக கருத வேண்டும் என்று தெரிவித்தது.

இந்த விளக்கம் 2014ஆம் ஆண்டு வரை முறையாக அமல்படுத்தப்படவில்லை. பின்னர் 2015 சிவில் சர்வீஸ் தேர்வு முதல் இது தீவிரமாக பின்பற்றப்பட்டது. இதன் காரணமாக, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சுமார் 100 ஓபிசி தேர்வர்களின் இடஒதுக்கீட்டுக் கோரிக்கைகள், கிரிமி லேயர் காரணத்தை கூறி நிராகரிக்கப்பட்டன. இதை எதிர்த்து அவர்கள் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர்.

உச்ச நீதிமன்றம்

சென்னை, டெல்லி, கேரள உயர் நீதிமன்றங்கள் தேர்வு எழுதிய இளைஞர்களுக்கு ஆதரவாக அவர்கள் இட ஒதுக்கீடு கோரலாம் என தீர்ப்பளித்தன. இந்த உத்தரவுகளை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், மார்ச் 11ஆம் தேதி அந்த தீர்ப்புகள் உறுதி செய்யப்பட்டன. அதாவது பெற்றோரின் வருமானத்தை ஓபிசி லேயர் கணக்கீட்டில் சேர்க்கக்கூடாது என்பது உறுதி செய்யப்பட்டது.

மார்ச் 11ஆம் தேதி தான் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இதை ஏற்கெனவே முடிவடைந்த தேர்வுகள், நியமனங்கள், பணியிட ஒதுக்கீடுகள் மற்றும் பணிமூப்பு விவகாரங்களுக்கும் பொருந்தும் வகையில் அமல்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு கோரியது. மேலும், பணியிடங்களுக்கு இடையிலான சமநிலையை ஆய்வு செய்ய இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

யாருக்கு பொருந்தும்?

ஆனால், தீர்ப்பை அமல்படுத்துவதை தாமதப்படுத்துவதற்கு நியாயமான காரணம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதேசமயம், இந்த தீர்ப்பின் மூலம் ஏற்கெனவே முடிவடைந்த அனைத்து தேர்வுகளையும் நியமனங்களையும் மாற்ற தேவையில்லை என நீதிமன்றம் கூறியது. அதாவது பெற்றோர் வருமானம் காரணமாக ஓபிசி கிரீமி லேயர் காரணமாக நிராகரிக்கப்பட்டு அனைவருக்கும் இது பொருந்தாது. மாறாக வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

2025ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஓபிசி பிரிவை சேர்ந்த இளைஞர்களுக்கு ஒதுக்கீட்டு நடைமுறை இன்னும் நிலுவையில் இருப்பதால், மார்ச் 11ஆம் தேதி வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலேயே அவர்களுக்கான ஒதுக்கீடு நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+