ஐ.பெரியசாமிக்கு நிம்மதி! வீட்டு வசதி துறை முறைகேடு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடை!
டெல்லி: தமிழ்நாடு அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி துறை முறைகேடு தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தடை விதித்துள்ளது.
2006-2011-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக பதவி வகித்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் தற்போது திமுக துணைப் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தும் வருகிறார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி, 2006-2011-ல் தமது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீடு ஒன்றை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு ஒதுக்கீடு செய்தார் என்பது வழக்கு. 2012-ம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் 2021-ம் ஆண்டு தம்மை விடுவிக்க கோரி எம்.பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மனுத் தாக்கல் செய்தார். இதனையேற்று அமைச்சர் ஐ.பெரியசாமியை கடந்த ஆண்டு எம்.பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இதற்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு எதுவும் செய்யவும் இல்லை.
இந்த பின்னணியில் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் பலர் வழக்குகளில் விடுவிக்கப்பட்ட தீர்ப்புகளை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். இதில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு விடுவிக்கப்பட்ட தீர்ப்பும் ஒன்று. இதனை விசாரித்த நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை ஜூலை மாதத்துக்குள் விசாரித்து முடிவுக்கவும் நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரப்பட்டிருந்தது.
இதனிடையே இந்த வழக்கில் தாம் நேரில் ஆஜராக விலக்கு கோரி சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இம்மனுவை எம்.பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமது மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி தரப்பு வலியுறுத்தியது. இதனை ஏற்று உச்சநீதிமன்றம் இன்று அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது. இன்றைய விசாரணையின் முடிவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலான வீட்டு வசதி துறை முறைகேடு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் கீழ் நீதிமன்றத்தின் விசாரணையை ஒத்திவைக்கவும் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications