டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இது தான் உங்களுக்கு கடைசி சான்ஸ்.." சிஏஏ போராட்டம் வழக்கில்.. உபி அரசை சாடிய சுப்ரீம் கோர்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: சிஏஏ சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்களிடம், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக உபி அரசு அபராதம் வசூலித்து வரும் நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீதிகளுக்கு வந்து போராட்டம் நடத்தினர். அப்போது சில இடங்களில் வன்முறை ஏற்பட்டு, பொதுச் சொத்துகள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

மாஃபியாக்களை ஓடவிட்டவர்.. - உபி. பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத்தைப் பாராட்டிய‌ அமித்ஷா! மாஃபியாக்களை ஓடவிட்டவர்.. - உபி. பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத்தைப் பாராட்டிய‌ அமித்ஷா!

 உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இது தொடர்பாக போராட்டக்காரர்களிடம் உத்தரப் பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி பர்வைஸ் ஆரிப் டிட்டு என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த நோட்டஸ்களை திரும்பப் பெற உபி அரசுக்குக் கடைசியாக ஒரு வாய்ப்பை வழங்குவதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அரசு இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்டத்தை மீறியதற்காக இந்த நோட்டீஸ்களை ரத்து செய்வோம் என்றும் தெரிவித்தனர்.

 கடைசி சான்ஸ்

கடைசி சான்ஸ்

மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதி கூறுகையில், "நீங்கள் சட்டப்படி உரிய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். பிப்ரவரி 18 வரை அவகாசம் தருகிறோம். அதற்குள் இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுங்கள் உத்தரப் பிரதேச அரசே புகார்தாரர், நீதிபதி மற்றும் வழக்கறிஞர் போல் நடந்து கொள்கிறது. எனவே, இந்த நோட்டீஸை வாபஸ் பெறவில்லை என்றால் அதை நாங்கள் ரத்து செய்ய வேண்டி இருக்கும்.

 முந்தை தீர்ப்புகள்

முந்தை தீர்ப்புகள்

உச்ச நீதிமன்றம் கடந்த 2009 மற்றும் 2018 ஆண்டுகளில் இரண்டு முக்கிய தீர்ப்புகளை வழங்கியது. இதுபோன்ற சம்பவங்களில் நீதித்துறை அதிகாரிகள் உரிமைகோரல் தீர்ப்பாயங்களில் நியமிக்கப்பட வேண்டும் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்குப் பதிலாக நீங்கள் கூடுதல் மாவட்ட நீதிபதிகளை நியமித்துள்ளீர்கள். இது எங்கள் பரிந்துரை மட்டுமே. 2019 டிசம்பரில் அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு எதிராக மட்டுமே இந்த வழக்கு தொடப்பட்டுள்ளது.

 வாபஸ் பெருங்கள்

வாபஸ் பெருங்கள்

மொத்தம் 236 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். உ.பி போன்ற பெரிய மாநிலத்தில் 236 நோட்டீஸ்களை வாபஸ் பெறுவது பெரிய விஷயம் இல்லை. எங்கள் பரிந்துரைகளைக் கேட்க முடியாது என்றால், பின்விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருங்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை எப்படிப் பின்பற்ற வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்குக் கூறுவோம். நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு செயல்பட்டு உள்ளது" என்று கடுமையான கருத்துகளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

English summary
Supreme court gives final opportunity to UP to withdraw proceedings on govt action on trying to recover money for property damage during the 2019 anti-Citizenship protest: Supreme court latest about 2019 anti-Citizenship (Amendment) Act protests in Uttar Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X