Suryakant: உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்
டெல்லி: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்று மாலையுடன் ஓய்வுபெற்றார். அவரைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் 53 ஆவது தலைமை நீதிபதியாக சூா்யகாந்த் இன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகளையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சூரியகாந்திற்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அடுத்த 15 மாதங்களுக்கு இவர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியில் நீடிக்கவுள்ளார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் நவம்பர் 23 ஆம் தேதி மாலையுடன் ஓய்வுபெற்றுள்ளார். அவரைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தின் அடுத்த புதிய தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவி யேற்றார்.
டெல்லி தர்பார் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், டெல்லி துணை நிலை ஆளுநர், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், மலேசியா, இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் பங்கேற்றனர். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் சுமார் 15 மாதங்கள் அதாவது 2027 பிப்ரவரி 9 ஆம் தேதி வரை பதவியில் நீடிக்கவுள்ளார்.
சூரியகாந்த் கடந்து வந்த பாதை
ஹரியாணா மாநிலம், ஹிசாா் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூரியகாந்த். 1962 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி பிறந்த இவர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் நீதிபதி சூா்ய காந்த் பணியாற்றி வந்தார். பின்னர், ஹிமாச்சலப்பிரதேச உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றாா்.
முக்கிய தீர்ப்புகள்
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது சூர்யகாந்த் பல்வேறு முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார். பேச்சு சுதந்திரம், ஜனநாயகம் தொடா்பான பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதேபோல, மசோதாக்களை நிறைவேற்ற குறிப்பிட்ட காலக்கெடு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு விதிக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கை விசாரிக்கும் அமர்வில் சூர்யகாந்தும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், பீகார் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின்போது நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்ற முக்கிய தீா்ப்புகளை அளித்த அமா்வுகளில் நீதிபதி சூா்ய காந்த் இடம்பெற்றிருந்தாா்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications